India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேகாலயாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் பெண்கள் ரோல் பால் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி, ராஜன் ரோல் பால் உள்விளையாட்டு அரங்க மாணவிகள் தமிழ்நாடு அணியில் கலந்து கொண்டனர். இதில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இவர்களை மாஸ்டர் பிரேம்நாத் உள்ளிட்ட விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் இ.எஸ் டபிள்யூ மெட்ரிகுலேசன் சேர்ந்த பள்ளி மாணவி மாவட்ட அளவில் 594/600 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதனால் அப்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி தாளாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர். கடந்த வருடம் போல் இந்த வருடமும் பெண்களே மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடதக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று(மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, காமாட்சிபுரம் பகுதியில் 5 சென்டி மீட்டரும், வேடசந்தூரில் 3 சென்டி மீட்டரும், திண்டுக்கல் நகரத்தில் 2 சென்டி மீட்டரும் பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 89 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் பிளஸ் டூ தேர்வை 3 ஆயிரத்து 160 மாணவர்கள்,4 ஆயிரத்து 154 மாணவிகள்
சேர்த்து மொத்தம் 7 ஆயிரத்து 314 பேர் எழுதினர். இதில் 2 ஆயிரத்து 801 மாணவர்கள், 3 ஆயிரத்து 923 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 724 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகளில் 19 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கலில் கொடைக்கானலைப் போல் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ரகசிய பூம்பாறை உள்ளது. அந்த அடந்த காடுகள் நிறைந்த கிராமத்தில் ஒரு மலையேற்றப்பாதையின் முடிவில் மன்னவனூர் ஏரி அமைந்துள்ளது. இந்த நன்னீர் ஏரி மலைகள் சூழ்ந்த பரந்த இடத்தில் இருக்கும். பிக்னிக் செல்ல அருமையான இட அமைப்பைக் கொண்டுள்ளது. பசுமை நிறைந்த மன்னவனூர் கிராமத்தில் அழகு அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி E. S. W. மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தன்யா ஸ்ரீ என்பவர் 594 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இன்று முதலிடம் பிடித்த மாணவியை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 95.40 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. அதில் மாணவர்கள் 93.46%, மாணவியர்கள் 96.98 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 95.40 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 93.46% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.98 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாளை(மே.7) முதல் 30.06.2024 வரை இ பாஸ் பதிவு செய்து வரவேண்டும். <
ஆத்தூர் தாலுகா, செம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் 50 கிலோ முதல் 80 கிலோ வரை உள்ள பிரிவுகளில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் வழங்கினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.