Dindigul

News May 7, 2024

 தண்ணீர் தேடி அழையும் தேன் குழவிகள் 

image

கோடை வெயிலால் வனவிலங்குகளை அடுத்து தேன் குழவிகளும், வண்டுகளும், தண்ணீர் தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.  சின்னாளப்பட்டி அருகே தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் குடிநீர் குழாயில் தண்ணீர் தேடி அலைந்த தேன் குழவிகள் தண்ணீர் குடிக்கும் அருமையான காட்சி வெளியாகியுள்ளது.

News May 7, 2024

மூன்று பாடங்களில் 100க்கு 100 எடுத்து மாணவி சாதனை

image

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவரது மகள் தரன்யா. இவர் திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இவர் 600 க்கு
577 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் மூன்று பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.  

News May 7, 2024

திண்டுக்கல்லில் ஆட்சியர் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வாகனங்கள் இ-பாஸ் எடுத்து வருவதை கொடைக்கானல் ரோடு காவல் சோதனைச்சாவடியில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வாகனங்களை ஆய்வு செய்தார். உடன் அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் இருந்தனர்.

News May 7, 2024

சுற்றுலா பயணிகளுக்கு ஆட்சியர் தகவல்

image

திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் அனைத்து வாகனங்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு  0451 2900233 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9442255737 என்ற கைபேசி எண்ணிலோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News May 7, 2024

திண்டுக்கல் மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் கீழ் இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு அசோக் நகர் பகுதியில் நிலத்தடி நீர் குழாய் சரிபார்த்து சின்டெக்ஸ் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் சின்டெக்ஸ் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News May 7, 2024

திண்டுக்கல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் அல்லது வெளியூரிலிருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனம் ஜெயம் இன்று எச்சரிக்கை வைத்துள்ளார்.

News May 7, 2024

திண்டுக்கல் அருகே ஒருவர் வெட்டி கொலை

image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சோலையன் மகன் ஆண்டார்(55). இவர் தனது வீட்டின் வாசலில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News May 7, 2024

திண்டுக்கல்: ரயிலில் அடிபட்டு முதியவர் பலி!

image

திண்டுக்கல், எம்விஎம் கல்லூரி அருகே ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இன்று பலியானார்.மேற்படி சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 7, 2024

திண்டுக்கல் மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சை

image

வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக வந்த பெண் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக்குக்கு என்று தனி பிரிவும் அதற்கான தனியாக ஊழியர்கள் தயாராக இருப்பதாக தலைமை மருத்துவர் உலகநாதன் தெரிவித்தார்.

error: Content is protected !!