Dindigul

News March 25, 2025

திண்டுக்கல் மக்களே உஷார்

image

ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம், வேலை தருவதாக மோசடி, குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருகிறோம் என பல்வேறு வகையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பேராசைப்படும் வாலிபர்கள், விரைவில் சம்பாதிக்க நினைத்து பணத்தை இழக்கின்றனர். எனவே இது போன்ற சம்பவங்களில் சிக்கி வாழ்க்கையை இழந்து விடாதீர்கள் என மாவட்ட சைபர் கிரைம் எச்சரித்துள்ளனர். (SHARE பண்ணுங்க)

News March 25, 2025

திண்டுக்கல்லில் வெளிநாட்டு ஆந்தை

image

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வெளிநாட்டு ஆந்தை ஒன்று சுற்றிக்கொண்டு இருந்து. இதையடுத்து சிறிது நேரத்தில் தரையில் இறங்கியது. தந்தையை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள், வெளிநாட்டு ஆந்தையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News March 24, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 24.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 24, 2025

ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) வாயிலாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான(JEE Mains) பயிற்சியில் சேர www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

காளகதீஸ்வரர் கோயில் பற்றி தெரியுமா?

image

மிகப்பழமையான சிவ ஸ்தலம் காளகதீஸ்வரர் கோயில் ஆகும். சேர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயில் சோழர், பாண்டியர் விஜய நகரப் பேரரசர்கள் மதுரை நாயக்க மன்னர்கள் யாவரும் பணிந்து போற்றித் திருப்பணி செய்யப் பெற்ற பெருமையுடையது. ராகு கேது தோஸம் நீங்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க இக்கோயில் வந்து வழிபடலாம். ஷேர் செய்யவும்.

News March 24, 2025

திண்டுக்கல்: நகரத்தை அதிரச் செய்த வெடி சத்தம்

image

திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் இன்று(மார்ச் 24) கேட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் என்ன சத்தம் என்று வெளியில் பயத்துடன் வந்து பார்த்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. 

News March 24, 2025

7 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பூட்டு, மலை பிரதேசங்கள், பிரியாணி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் அதற்கான வரலாற்று பின்புலமும் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவை எல்லாவற்றிலும் முதன்மையான சிறப்பு 7ஆம் நூற்றாண்டின் சைவப் புலவரான அப்பரின் தேவாரத்தில் ‘திண்டுக்கல்’ இடம்பெற்றுள்ளது தான். மேலும், திண்டுக்கல்லுக்கு ‘திண்டீச்சரம்’ என்கிற பெயர் உண்டு என்பதும் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

News March 24, 2025

திண்டுக்கல்லில் ரூ.60 ஆயிரம் சம்பளம்… இன்றே கடைசி நாள்

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பாக பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Nurse, Medical Officer, Health Inspector என மொத்தமாக 4 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். <>விண்ணப்ப படிவத்திற்கு இதை கிளிக் செய்யவும். <<>>

News March 24, 2025

திண்டுக்கல்: ஆபாசமாக பேசிய பாஜக தலைவர் கைது 

image

திண்டுக்கல்: பழனியைச் சேர்ந்த பா.ஜ.க மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடுமையாக பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அதில், அவரது கட்சியைச் சேர்ந்த எல்லைதுரை என்பவரின் மனைவி புவனேஷ்வரி குறித்து தான் கனகராஜ், அவதுாறாக பேசியுள்ளார் என போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கனகராஜை கைது செய்தனர்

News March 23, 2025

திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!

image

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், இன்று திண்டுக்கல் மாநகர் முழுவதும், வால் போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் ‘டாஸ்மாக் ஊழல்’, அந்த தியாகி யார்?, 1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இது திமுகவை தாக்கி அடிக்கப்பட்ட போஸ்டர் என்று, மக்களால் பேசப்படுகிறது. இந்த போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!