Dindigul

News May 8, 2024

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழை

image

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் 1 மணி நேரமாக மிதமான மழை பெய்தது. குறிப்பாக போளூர்,கிளாவரை, பூண்டி, கவுஞ்சி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனையடுத்து மலைக்கிராம மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஆலங்கட்டி மழையை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News May 8, 2024

நகராட்சி அலுவலகம் எதிரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

image

பழனி நகராட்சி அலுவலகம் எதிரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். இன்று காலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மாலை நேரத்தில் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகளை அமைக்காமல் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News May 8, 2024

சிறு குறு நிறுவனங்களுக்கு விருது

image

திண்டுக்கல் மாவட்டத்தில்
மாநில, மாவட்ட அளவிலான விருது பெற குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்
விபரங்களுக்கு,  “பொது மேலாளர்,  மாவட்ட தொழில் மையம், எஸ்.ஆர் மில்ஸ் சாலை, சிட்கோ தொழில் பேட்டை, திண்டுக்கல்–624003“ என்ற முகவரியில் நேரடியாகவோ, dicdindigul@gmail.com என்ற இ-மெயில், 8925533943 என்ற கைபேசில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News May 8, 2024

கொடைக்கானல்:செல்லும் பயணிகளின் கவனத்திற்கு

image

கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு கொடைக்கானலுக்கு மே -மாதம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்படும். நேரம் காலை 8.00-9.00-10.00-11.00, நண்பகல் 12.00 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெரியவருக்கு 150 -ரூபாயும், சிறியவர்கள் 75 -ரூபாய் கட்டணமாக வசூல் பண்ணப்படுகிறது . இந்த பேருந்து கொடைக்கானலில் உள்ள 12 சுற்றுலா தளங்களுக்கு சென்று திரும்பும்.

News May 8, 2024

திண்டுக்கல்:  வெட்டி கொலை: போராட்டம்

image

நிலக்கோட்டை தாலுகா, நடுப்பட்டி கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் காரியம்பட்டி , நடுப்பட்டி பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இன்று தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் உண்மையான குற்றவாளியை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் குற்றவாளியை கைது செய்யும் வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர். 

News May 8, 2024

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில்  ORS கரைசல் 

image

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பேருந்து நிலையத்தில் 7- இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் ஒ. ஆர். எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கரைசலை குடிப்பதன் மூலம் பொதுமக்கள் வெயிலின் சோர்வு நீங்கி புது உற்சாகத்துடன் இருப்பதாக மக்கள் இன்று தெரிவித்தனர்.

News May 8, 2024

ஊறுகாய் புல் விற்பனை அதிகரிப்பு

image

பழனியில் தனியார் நிறுவனம் ஊறுகாய் புல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. 70 நாட்கள் வாழ்ந்த சோள பயிரை அரைத்து பதப்படுத்தி சாக்கு மூட்டைகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவான ஊறுகாய் புல் விவசாயிகள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். 50 கிலோ அடங்கிய மூட்டை 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News May 8, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை கல்லூரி கனவு

image

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். திண்டுக்கல்லில் நாளை கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திண்டுக்கல் உட்பட 14 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 7, 2024

எதிர்க்கட்சிகளை முடக்கும் பாஜக

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர். “எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும் , பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருகிறது” என குற்றம்சாட்டினார். 

error: Content is protected !!