India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வைகை அணையில் இருந்து இன்று பாசனத்திற்காக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 92.32 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.42 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.11 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திண்டுக்கல், பழனி அருகே கலிங்கநாயக்கன் பட்டியில் குடும்ப தகராறு காரணமாக ஜெயபால் (34) என்பவர் அரிவாளால் வெட்டியதில் அவரது மாமியார் சித்ரா (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி நிவேதா படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்ராவின் உடலை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவீதி பகுதியில் 2 சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியில் இருக்கும் செக்யூரிட்டிகள் தங்களது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் சுற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே12 ஆம் தேதி திண்டுக்கல்லில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மே 13 முதல் மே 15 வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மழை அறிவிப்பால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில், இன்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனத்தை சாலையின் முக்கிய வீதிகளில் ஓட்ட அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு பெற்றோர்கள் ஓட்ட அனுமதிக்கும் வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு, பெற்றோருக்கு ரூ.25,000 வரை அவதாரம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பழனி நகராட்சி மார்கெட்டுக்கு விவசாயிகள் புளியங்காய் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். புளியங்காய் வரத்து அதிகரித்த நிலையில் விலை கடுமையாக சரிந்துள்ளது. 10 கிலோ அடங்கிய புளியங்காய் மூட்டை ரூ.400 முதல் ரூ.700 வரை இன்று விலை போனது. கடந்த ஆண்டு புளியங்காய் விலை ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து புளியங்காய் விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் VOC நகரில் முருகன் என்பவர் வீட்டில் அதிகாலை சுமார் 5 அடி நீளமுள்ள கட்டுவீரியன் பாம்பு இன்று அதிகாலை 3 மணி அளவில் புகுந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அதிகாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுவீரியன் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அருண்குமார். விடுமுறைக்காக தங்கச்சி,அம்மாவுடன் பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அருகில் இருந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டனர். அம்பிளிக்கை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.