India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
சென்னையில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் எதிரொலியாக, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் தடை செய்யப்பட்ட 23 ரக நாய்களை யார் வளர்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க வேண்டாம் எனவும், வெளியே அழைத்து வரும்போது வாய்க்கவசம் அணிந்து அழைத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் மாணவி காவ்யாஸ்ரீ (499/500 ) மாநிலத்தில் முதலிடம் பிடித்தார் . கடந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் நந்தினி (600/600) மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார் தொடர்ச்சியாக இரண்டு வருடம் 10 மற்றும்12 ஆம் வகுப்பில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது திண்டுக்கலுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் உள்ள நவாமரத்து பட்டியை அடுத்துள்ள எல்லைமேடு அருகே ஒட்டன்சத்திரம் நோக்கி பைக்கில் வந்த இளஞர்கள் மீது வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 2 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள் கிரிவலப் பாதையில் சென்று வர வசதியாக கோயில் நிர்வாகம் பேட்டரி கார்கள் ஒரு மினி பேருந்தை இயக்கி வருகிறது. பழனியைச் சேர்ந்த ஜவகர் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் சார்பில் ரூ. 26 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பேருந்தை பெற்றுக் கொண்டார்.
1908 ஆம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த வனஅதிகாரி எச்.டி. பிரையன்ட், கொடை ஏரிக்கு அருகில் ஒரு சிறிய பூங்காவை அமைத்தார். தற்போது அவரின் பெயரில் 20 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா உள்ளது. பல வகையான செடிகள், புதர்கள், மரங்கள் போன்றவை இங்கு உள்ளன. இந்த பூங்காவில் 1000க்கும் மேற்பட்ட ரோஜக்களின் தொகுப்பும், 175 ஆண்டுகள் பழமையான யூகலிப்டஸ் மரமும் உள்ளது. இங்கு அழகிய நடைபாதையில் இயற்கையை ரசிக்கலாம்.
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆர்.வி.எஸ் செம்பட்டி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் குழுவினர் இணைந்து விதை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விதை கண்காட்சி நடத்தினர். இதில் பாரம்பரிய காய்கறி ரக விதைகள் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலை., வெளியிட்ட பயறு வகைகள், சிறுதானிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.8% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.45 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.94 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கொசவபட்டி அக்க்ஷயா பள்ளி மாணவி காவியாஶ்ரீயா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.32 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 24,665, தேர்வில் வெற்றி மாணவர்கள் 22,770, திண்டுக்கம் மாநில அளவில் 22 ஆம் இடம் பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.