India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பேருந்துகளின் தரம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் நேற்று ஆய்வு நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் மாணவி காவியஸ்ரீயாவை சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் பாராட்டினார். இதனையடுத்து எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் எழுதிய இது யாருடைய வகுப்பறை என்ற புத்தகத்தையும் பரிசாக வழங்கி கௌரவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் தொகுதி, கொசவபட்டி அக்ஷயா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி காவியஸ்ரீயா நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மாணவியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
கொடைக்கானல் சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே, ஜூன் மாதங்களில் கொடைக்கானல் வர54, 112 வாகனங்கள் பதிவு செய்துள்ளதாகவும், மே 7 முதல் இன்று வரை9, 555 வாகனங்கள் கொடைக்கானலுக்குச் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 1,500 வாகனங்கள், 10,000 சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரப் பகுதிகளில் திராட்சை பழங்கள் காய்த்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திராட்சை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது, “இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கோடை மழை பெய்யவில்லை. இதனால் திராட்சை விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. கிலோ ரூ.80 முதல் ரூ100வரை விற்பனையாகிறது” என தெரிவித்தனர்.
பழனி அருகே உள்ள கலிக்கம்பட்டி புது காலனியை சேர்ந்த தம்பதி ஜெயபாலன்- நிவேதா. குடும்ப பிரச்னை காரணமாக நிவேதா தாயார் வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி மனைவி வீட்டிற்கு சென்ற ஜெயபாலன் தகராறு செய்து, மாமியாரை வெட்டிக்கொன்றும் தடுக்க வந்த மனைவியின் கையையும் துண்டாக்கினார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜெயபாலனை போலீசார் இன்று கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உரங்கள் போதிய இருப்பு உள்ளது எனவும், காலாவதியான உரங்களை விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் வேளாண் தரக் கட்டுப்பாடு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். அனுமதி இல்லாத உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது. விதிமுறைகளை மீறும் உரக்கடைகளின் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.11) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை காலமாக இருந்தாலும் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.