Dindigul

News May 13, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நிலக்கோட்டை தாலுகா மேலகோவில்பட்டியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அப்பெண்ணை அனுப்பி வைத்தனர். 

News May 13, 2024

திண்டுக்கல்: இன்று மழை பெய்ய வாய்ப்பு!

image

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அவதி 

image

பழனி நகர் முழுவதும் நாய்கள் கூட்டம் கூட்டமாக, சுற்றித்திரிந்து வருவதால் மக்கள் வெளியில் நிம்மதியாக நடமாட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, வாகனங்களுக்குள் விழுந்து விடுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி தற்போது தெருவில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 12, 2024

 நான்கு பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

image

திண்டுக்கல் சி. கே. சி. எம். காலணியில் மார்ச்- 24- ஆம் தேதி வீரகௌத்தம் என்பவர் வெட்டி படுகொலை செய்த நிலையில் திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் அருண்குமார், அஜய் குமார், சூர்யா, மோகனசுந்தரம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  குற்றச் செயலை குறைக்கும் பொருட்டு மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் கீழ் இன்று ஆட்சியர் குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News May 12, 2024

திண்டுக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டதில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மின்னணு இயந்திரங்கள் ஆறு சட்டமன்றத் தொகுதிகளாக பிரித்து வெவ்வேறு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர்,அதிரடிப்படை, உள்ளூர் காவலர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பில் உள்ள இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமரா தொடர்பாக எந்த ஒரு புகாரும் வராத வகையில் சுழற்சி முறையில் டெக்னீசியன்கள் பணியில் உள்ளனர் என ஆட்சியர் தெரிவித்தார்.

News May 12, 2024

கள்ளர் பள்ளி இணைப்பை எதிர்த்து போராட்டம்

image

அரசு கள்ளர் பள்ளி பாதுகாப்பு கூட்டுக் குழு நடவடிக்கைகளின் இணைப்பு கூட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் சின்ன பாண்டி தலைமை வகித்தார். மதுரை திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டத்தில் 299 அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இணைப்பை எதிர்த்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News May 12, 2024

திண்டுக்கல்: நீர் தொட்டியில் விழுந்த மான்

image

பழனி அருகே உள்ள வரதமா நதி அணைக்கட்டில் கட்டப்பட்டுள்ள நீர் தேக்கத்தில் மான் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த நிலையில் , அதற்குள் விழுந்தது. பல நேரமாக போராடிய மான் அந்த நீர் தேக்கத்தின் ஓரத்திற்கு சென்றது .
மேலும் வனத்துறையினருக்கு உடனடியாக அங்கு இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். தண்ணீரில் விழுந்த மான் மீட்கப்பட்டது. 

News May 12, 2024

திண்டுக்கல்: சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலைய முகப்பில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இன்று (12.5.2024) ஏராளமான பயணிகள் இ பாஸ் தொடர்பான அறிவிப்புகள், இ பாஸ் சந்தேகங்களுக்கான தொலைபேசி எண்கள் . கடைசிநாள் போன்றவற்றை அதை பார்த்து தெரிந்து கொண்டனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

News May 12, 2024

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

அக்னி நட்சத்திர வெயில் துவங்கிய நிலையில் கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் தணிந்து குளு, குளு வானிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மேகக் கூட்டம் தரை இறங்குகிறது. நேற்று மதியத்திற்கு பின் லேசான சாரல் பெய்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக் ,வன சுற்றுலாத்தலங்களை பயணிகள் ஏராளமானோர்  பார்வையிட்டனர்.

News May 12, 2024

வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

image

திண்டுக்கல் அடுத்த என்.பஞ்சம்பட்டியை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி சொந்த ஊர் திரும்பினர். இன்று அதிகாலை திண்டுக்கல் இ.பி காலனி பிரிவு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் காயமடைந்த நிலையில் இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!