Dindigul

News May 14, 2024

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் www.skilltraining.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி  தகவல் தெரிவித்துள்ளார்.

News May 14, 2024

திண்டுக்கல்: 136 மாணவா்கள் பங்கேற்பு

image

திண்டுக்கல்: விளையாட்டு விடுதிகளில் சோ்வதற்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான தோ்வு முகாமில் 136 மாணவர்கள் கலந்து கொண்டனா். மாணவா்களின் தகுதி திறன் குறித்த விவரங்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு இணைய வழியில் அனுப்பப்பட்டுள்ளது. தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு, இதுகுறித்த தகவல் நேரடியாக கைப்பேசி மூலம் தெரிவிக்கப்படும் என விளையாட்டுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

News May 13, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

ரேசன் கடைகளுக்கு விற்பனை முனைய  இயந்திரங்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில
643 நியாயவிலைக் கடைகளுக்கு 4 ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய 
விற்பனை முனைய  இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

News May 13, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட காட்டம்பட்டியை சேர்ந்த வீரப்பன் மகன் அர்ஜுன் (20 ) என்பவர் இன்று கல்பட்டி பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது திண்டுக்கல் நோக்கி வந்த கனரக வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 13, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடு கட்ட இடமிருந்து வீடு கட்ட முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டை, பட்டா அல்லது பத்திர நகல், வங்கிப் புத்தகம் நகல் ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளி அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

திண்டுக்கல் மழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

தம்பி மனைவியை வெட்டிய அண்ணன்

image

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள தொட்டனம்பட்டியில் இன்று கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவி சுசீலா (39) என்பவரை குமரவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுசீலா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 13, 2024

திண்டுக்கல்: அப்பளம் போல் நொறுங்கிய கார்

image

வத்தலகுண்டு அருகே திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு பெரியகுளம் நோக்கி சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இதில் கார் டிரைவர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த தனபாண்டி (21) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டிராக்டர் மீது மோதியதில் காரின் பின்னால் மற்றொரு கார் மோதி சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!