India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெற்கு வாயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன்(26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 2023ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதன்குமார்(22) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(மே 14) மதன்குமாருக்கு 20 ஆண்டு சிறை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வாயிலாக 4,971 நபர்களுக்கு ரூ.3.06 கோடி மதிப்பிலான சிகிச்சையும், திண்டுக்கல் மருத்துவ சேவை வாயிலாக 1,309 நபர்களுக்கு ரூ.46 லட்சம் மதிப்பிலான சிகிச்சையும், தனியார் மருத்துவமனைகள் வாயிலாக 31 நபர்களுக்கு ரூ.6.32 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையும் என மொத்தம் 6311 நபர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பிலான மருத்துவ சேவை அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வீடு, கடைகள் நிலுவை வரிகளையும், 2024 – 25 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்களையும் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் வரி செலுத்தாத கடைகளுக்கு உடனடியாக ‘சீல்’ வைக்கவும், வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு, புதை சாக்கடை இணைப்புகளை துண்டிக்கவும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட எல்லைபட்டி கிராம மக்கள் விரதமிருந்து காப்பு கட்டி 108- தீர்த்த கவசங்களுடன் இன்று எல்லைப்பட்டியில் இருந்து ராமலிங்கபுரத்தில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யும் வசதி அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் வசதியுடன் கூடிய இயந்திரத்தினை கையாளுவது குறித்து நியாயவிலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையம் அருகில் உள்ள காந்திநகர் தண்டவாளம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரயில்வே போலீசாருடன், ஒட்டன்சத்திரம் போலீசாரும் இணைந்து வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிசிடிவி ஆதாரத்தை வைத்து வினோபா நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கொலையாளி என உறுதி செய்யப்பட்டு இன்று கைது செய்தனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திண்டுக்கல் மாவட்டம் 28 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 83.12% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 75.50 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.93 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் 84.74% பேரும், மாணவியர் 94.65% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 89.97% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. திண்டுக்கல் 28ஆம் இடத்தை பிடித்தது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறியலாம்.
Sorry, no posts matched your criteria.