Dindigul

News May 16, 2024

ஆசிய போட்டியில் திண்டுக்கல் மாணவி

image

திண்டுக்கல் ஜி.டி.என்.கலை கல்லுாரி மாணவி அனுஷியா பிரியதர்ஷினி வியட்நாமில் இன்று முதல் மே-16 வரை நடக்கும் ஆசிய டேக்வாண்டோ போட்டியின் 62கி., எடை பிரிவில் இந்திய அணி சார்பில் விளையாடுகிறார். இதற்காக பயிற்சியாளர் சுதர்சன் உடன் வியட்நாம் சென்றார்.
இவர்களை கல்லுாரி தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரைரத்தினம், உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், என பலர் வாழ்த்தினர். 

News May 16, 2024

கொடைக்கானல்: நாளை மலர் கண்காட்சி

image

கொடைக்கானலில் வரும் (மே 17) மலா்க்கண்காட்சி , கோடைவிழா தொடங்கவுள்ளது. பிரையண்ட் பூங்காவில் பேன்சி, டைந்தேஸ், ஆந்தோரியம் , ஜொனி, கிங் ஆஸ்டா் உள்ளிட்ட 25 வகைகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டன. கடந்த ஒருவாரமாக தொடா்ந்து பெய்துவரும் மழையால், மலா்ச் செடிகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், நெகிழிப் பைகள் மூலம் பாதுகாக்கபடுகின்றன

News May 16, 2024

திண்டுக்கல்: மழைநீரில் சிக்கிய கார்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதியில் சென்று கார் மழைநீரில் செல்லமுடியாமல் சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற மற்றவர்கள் காரை தள்ளிவிட்டு வெளியேற்றினர்.

News May 16, 2024

நாளை முதல் திண்டுக்கல்லில் தீவிர பரிசோதனை

image

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் தெரிவித்த தகவலின் பெயரில் நகரில் தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் மாநகர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் பழைய டயர்கள் விற்பனை செய்யும் இடம், மற்றும் நன்னீர் தேங்கியுள்ள இடங்களில் தீவிர பரிசோதனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

News May 15, 2024

திண்டுக்கல் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதாக வரும் தகவலின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்து வரும் நோயாளிகளின் விவரங்களை தினசரி சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பு இருந்தால் இருந்தால் அது குறித்த தகவல்களை உடனடியாக திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க இன்று அறிவித்துள்ளார்.

News May 15, 2024

திண்டுக்கல்: மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது!

image

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராஜ பெருமாள்(36). இவர் அவருடைய மகளை, தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய நிலையில் அப்பெண் கர்ப்பமடைந்தார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான காவலர் குழுவினர் இன்று 15.05.2024 ராஜ பெருமாளை போக்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 15, 2024

திண்டுக்கல்லில் வெங்காய ஏற்றுமதி பாதிப்பு

image

திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென்றே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.  இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் சின்னவெங்காயம், பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்துக்கு 46 சதவிகிதம் வரி விதித்துள்ளதால் வெங்காய ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

News May 15, 2024

பழனி: வைகாசி விசாக ப்ரம்மோத்ஸவம்

image

திண்டுக்கல் மாவட்டம் பழநி ஸ்ரீ பெரியநாயகி அம்மன் திருக்கோயிலின் வைகாசி வஸந்தோத்ஸவம் எனப்படும் வைகாசி விசாக ப்ரம்மோத்ஸவம் நாளை(16/05/2024 வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் த்வஜாரோஹணம்(கொடியேற்றம்) நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

திண்டுக்கல்: லாரி கவிழ்ந்து விபத்து

image

திண்டுக்கல் மாவட்டம் சின்ன கோயம்புத்தூர் அருகே உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், இன்று(மே 15) வாழைக்காய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளத்தில் இருந்து வாழைக்காய் ஏற்றிவந்த நிலையில், சண்முக நதி பாலத்திற்கு அருகில் வேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர் காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தினர்.

News May 15, 2024

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆட்சியர் ஆய்வு

image

கொடைக்கானலில் நாளை மறுநாள் 61வது மலர்கள் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதா பார்வையாளர்கள் அமரும் மாடம், மலர்களால் வடிவமைக்கபடும் உருவங்கள், ஸ்டால்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதா, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!