India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் சார்பு ஆய்வாளர் மஞ்சநாதன், பயிற்சி சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அதில் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி முறையான ஆவணங்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் அதிவேகமாக வரும் வாகனங்கள் மற்றும் மது போதையில் வரும் நபர்களை கண்டறிந்து அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேடசந்தூர், புகையிலை நிறுத்தம் ஆகிய பகுதிகளில் 9 செ.மீட்டரும், நத்தம் பகுதியில் 3 செ.மீட்டரும், நிலக்கோட்டை பகுதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 2024ம் ஆண்டில் தற்போது வரை 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டூவீலர் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும்
தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி – தாராபுரம் சாலை கந்தப்பகவுண்டன்வலசு அருகே உள்ள பகுதியில், பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துபிரவீன்குமார்(25) என்பவரை அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகன் மாரிமுத்து(29) என்பவர் மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நேற்று நள்ளிரவில் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து பழனி தாலுகா காவல்துறையினர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளில் 4,000 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் 2500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தரமற்ற பட்டுப்புழு முட்டை, பட்டுக்கூடு விலை சரிவு காரணமாக பழநி பகுதியில் விவசாயிகள் பட்டுப் புழுக்களை தீ வைத்து அழித்து வருகின்றனர்.
கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் நாளை 61 ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மலர் கண்காட்சியினை காண வரும் மாற்றுதிறனாளிகளுக்கும், அவருடன் வரும் உதவியாளர்களுக்கும் அனுமதி இலவசம் என பிரையன்ட் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கிய நிலையில் இங்குள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிக்க அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அப்பர் லேக்வியூ , மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, கோல்ப் மைதானம், பாம்பார் ,பிரையன்ட் பூங்கா, உள்ளிட்ட 12 இடங்களை கண்டுகளிக்க பெரியோர்களுக்கு ரூ.150;12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பிஎன்சி தா்ம சாஸ்தா அறக்கட்டளை சாா்பில், வசதி வாய்ப்பற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித் தொகை பெற விரும்பும் மாணவா்கள், தங்களது கல்வி விவரம், பெற்றோரின் பணி விவரங்கள், மதிப்பெண்கள் பட்டியலுடன் விண்ணப்பத்தினை ஜூன் 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 87620 13767 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கொடைக்கானல் கோடை விழா நாளை (மே-17) பிரையன்ட் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் தொடங்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.