Dindigul

News May 18, 2024

திண்டுக்கல்: போலீசாருக்கு கட்டாயம் தலைக்கவசம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் கீழ், ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் இன்று ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், கார், ஜீப் போன்றவைகளில் செல்லும் பொழுது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

News May 18, 2024

திண்டுக்கல்: பெண் மீது தாக்குதல்

image

வேடசந்தூர் அருகே வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி கவிதா. அதே பகுதியைச் சேர்ந்த துளசி ராம் 4 வருடத்திற்கு முன்பு மகளின் திருமணத்திற்காக ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளார். மேலும் காளீஸ்வரி கவிதா பணத்தை திருப்பி கேட்டதால் அவரைத் தாக்கி பணத்தை திருப்ப தர முடியாது என துளசி ராம் கூறியுள்ளார். காளீஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

News May 18, 2024

திண்டுக்கல்: காவல்துறையினரின் செயலால் பாராட்டு

image

திண்டுக்கல் ஜம்புலிங்கம் பட்டியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி லதா (44). ஆதரவற்ற நிலையில், உடல்நலம் சரியில்லாமல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் தொண்டு நிறுவனம் உதவியுடன் மதுரையில் நேற்று லதாவின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

News May 17, 2024

தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

image

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையகோட்டையில் இருந்து பள்ளபட்டி செல்லும் வழியில் உள்ள விவசாய இடங்களில் கிணற்றில் போதிய நீர் இல்லாமல் முருங்கை செடிகள் அனைத்தும் வாடிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் காய்ந்த செடிகள் அனைத்தும் மீண்டும் துளிர் விட துவங்கியதால் இன்று விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 17, 2024

நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை திண்டுக்கல்லில் கனமழை முதல் மிககனமழைக்கு பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

திண்டுக்கல்: மழைக்கு வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திண்டுக்கல்லில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

கொடைக்கானலில் தொடங்கியது மலர் கண்காட்சி

image

கொடைக்கானலில் தோட்டக்கலை துறை, சுற்றுலாத்துறை சார்பில் 61வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் இன்று தொடங்கியது.  இந் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டது. இதில் மலர்களால் ஆன மயில், கார்ட்டூன் சேவல் மற்றும் டெடி பியர், போன்றவைகள் பூக்களினால் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. இதைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். 

News May 17, 2024

திண்டுக்கல்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம், அழகுபட்டியில் நேற்று காளிமுத்து என்ற இளைஞரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். படுகாயம் அடைந்த காளிமுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News May 17, 2024

திண்டுக்கல்: 18 கடைகளுக்கு சீல் வைப்பு

image

திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளில் புகையிலை விற்பனை அதிகளவில் நடப்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புகையிலை பதுக்கியதாக 18 கடைகளுக்கு சீல் வைத்து 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்தனர்.

News May 17, 2024

திண்டுக்கல்: மாவட்டத்தில் பாலியல் தொழிலா ?

image

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் படி பழனி உட்கொண்ட காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையில் பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அனைவரும் பழனியில் உள்ள லாட்ஜ், மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் பாலியல் தொழில் நடக்கிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!