Dindigul

News March 26, 2025

திண்டுக்கல்லின் பேகம்பூர் வரலாறு

image

தென் இந்தியாவில் உள்ள முகலாய கலாசாரத்தின் எச்சங்களில் மிக முக்கியமான ஒரு இடம் திண்டுக்கல். ஆம், ஹைதர் அலி, திப்பு சுல்தான் என திண்டுக்கல்லை ஆண்ட முகலாய மன்னர்கள் பல முகலாய கலாசாரப் பதிவுகளையும் அங்கு விட்டுச் சென்றுள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு இடம் ’பேகம்பூர்’. ஹைதர் அலியின் சகோதரி அமீருநிஷா பேகம் பிரசவத்தில் இறந்தார். அவர் இறந்த இடம் தான் ’பேகம்பூர்’ எனப் பெயரிடப்பட்டது.

News March 26, 2025

காலாவதி உரம் விற்றால் லைசென்ஸ் ரத்து

image

திண்டுக்கல் மாவட் டத்தில் தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை மையங்கள் அதிகளவில் செயல் பட்டு வருகின்றன. இம் மையங்கள் செயல்பட வேண்டிய விதங்கள் குறித்து வேளாண் துறையினர் கூறியதாவது: விலை பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அனுமதி இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்ய கூடாது. பூச்சிக்கொல்லி சட்டம் 1968ன் படி கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

News March 26, 2025

ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள்

image

புருலியா –
திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசார் & போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினருடன் இணைந்து சோதனைபோது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பொட்டலங்களை எடுத்து பார்த்தபோது அதில் 4 கிலோ 400 கிராம் கஞ்சா & புகையிலை வஸ்துக்கள் இருந்தது தெரியவே அதனை கைப்பற்றி ரயில்வே காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தி திண்டுக்கல் போதைப்பொருள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

News March 26, 2025

திண்டுக்கல்; தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 26, 2025

திண்டுக்கல்: டீசல் ஊற்றி தொழிலதிபர் எரித்துக் கொலை

image

கொடைக்கானலில் மறுவாழ்வு மைய நண்பர்கள் காட்டேஜ் உரிமையாளரை எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைதானார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் சிவராஜ் (60). இவர் அங்குள்ள பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 2 மனைவிகள், 3 பிள்ளைகள் உள்ளனர்.

News March 26, 2025

ராணுவத்தில் சேர விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்

image

திண்டுக்கல்:இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு (சிஇஇ) பின்னர் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும்.உடனே SHARE பண்ணுங்க.

News March 26, 2025

திண்டுக்கல்: சிறுமிகளிடம் அத்துமீறிய சகோதரர்களுக்கு ஆயுள்

image

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் அழகாபுரியைச் சேர்ந்த சகோதரர்கள் ரங்கநாதன் (26), கருப்புசாமி (31), கூலித்தொழிலாளிகள். இருவரும் 2023ல் அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகள்களான முறையே 4, 9 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ரங்கநாதன், கருப்புசாமிக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News March 25, 2025

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

பழனியை அடுத்த சத்திரப்பட்டி வேலூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (66). இவர் ஞாயிற்றுக்கிழமை பழனியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஆயக்குடி நினைவிடம் அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்திலிருந்து  அவர் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 25, 2025

திண்டுக்கல் மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

திண்டுக்கல்: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.

News March 25, 2025

போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

image

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <>இங்கு கிளிக் செய்க.<<>> இதில் ஊதியம் ரூ.12,000 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ( SHARE பண்ணுங்க)

error: Content is protected !!