Dindigul

News May 19, 2024

கொடைக்கானலில் நீர்வரத்து அதிகரிப்பு

image

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா் மழையால் அருவிகளில் நேற்று நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேல் மலைப் பகுதிகளான கீழானவயல், மன்னவனூா் , கவுஞ்சி, போலூா் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெள்ளி நீா் அருவி, பாம்பாா் அருவி, உள்ளிட்ட பல்வேறு நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

News May 18, 2024

திண்டுக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை

image

திண்டுக்கல்லில் நாளை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா அலுவலகம், நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி போன்ற இடங்களில் அவசர உதவி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அவற்றின் எங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறையினர், தயார் நிலையில் உள்ளனர்.

News May 18, 2024

கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

திண்டுக்கல்லில் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலகத்தை 0451 – 2400162. 163,164 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் அலுவலர்கலுக்கு தெரிவித்து நிவாரணப்பணி மேற்கொள்ளப்படும். ஆறு, குளங்கள், ஏரி, நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 18, 2024

திண்டுக்கல்லில் நாளை ஆரஞ்சு அலர்ட்

image

திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா சிறப்பு நேரம் நீடிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை விழா மற்றும் 61 ஆவது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. வழக்கமாக பிரையண்ட் பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மூன்று மணி நேரம் கூடுதலாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

News May 18, 2024

ஒட்டன்சத்திரம் அருகே விபத்தில் 4 பேர் காயம்

image

ஒட்டன்சத்திரம் – செம்பட்டி சாலையில் கன்னிவாடி காவல் நிலையம் அருகில் இன்று மதுரையிலிருந்து பழனி சென்ற சுற்றுலா பேருந்தும், கோவையிலிருந்து கொடைக்கானல் சென்ற சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.  8 பேர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

News May 18, 2024

ஒட்டன்சத்திரம்: காணாமல் போன டூவீலருக்கு அபதாரமா

image

ஒட்டன்சத்திரம் பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இருசக்கர வாகன உரிமையாளருக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்துள்ளனர். காணாமல் போன வாகனத்தில் வாகன திருடன் ஜாலியாக வலம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருடு போன பைக்கை இதுவரை கண்டுபிடித்து தராத போலீசாரை பொதுமக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். 

News May 18, 2024

ஆத்தூர் காளியம்மன் கோவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி

image

ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள அம்பேத்கர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா இன்று முதல் துவங்குகிறது. இதன் முதல் கட்டமாக ஆத்தூர் நகர் முழுவதும் உள்ள நுழைவுச்சாலையில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை முளைப்பாரி நிகழ்ச்சியும் நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டுடன் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.

News May 18, 2024

திண்டுக்கல்: எரிந்த நிலையில் எலும்புக்கூடு

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கீரனூர் பகுதிக்கு உட்பட்ட கோயில் அம்மாபட்டி என்ற கிராமத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எரிந்து நிலையில் சுடுகாட்டில் எலும்புக்கூடு காணப்பட்டுள்ளது. தொடர்ந்து கொலை ஏதும் செய்து எரித்துள்ளனரா ? என்ற கோணத்தில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தது யார் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News May 18, 2024

பிரயண்ட் பூங்காவில்  360 செல்பி

image

கொடைக்கானலில் தற்போது ஏப்ரல், மே மாத சீசன் களை கட்டியுள்ளதால் 61வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடக்கிறது.  இதன் காரணமாக தோட்டக்கலைத் துறை சார்பில் பூக்களிலான தேசிய பறவை மயில், கரடி குட்டி, “பூக்களின் 360″ செல்பி கேமரா” எடுக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனுள் சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!