Dindigul

News May 20, 2024

திண்டுக்கல்: கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, இன்று (20.05.2024) பார்வையிட்டார். பின்னர்,  கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்புகள் பதிவு செய்யப்பட்ட பதிவேடுகள் அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்.

News May 20, 2024

திண்டுக்கல்: கணவன், மனைவி தற்கொலை மனு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தானமாக கொடுத்த இடத்தை மகன் விற்பனை செய்துள்ளார். இதனால், அந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பட்டாவை ரத்து செய்யாததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைத்து விட்டு, தற்கொலை செய்யப் போவதாக நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மகாமுனி மற்றும் அவரது மனைவி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News May 20, 2024

கொடைக்கானல்: காா் கவிழ்ந்து இளைஞா் பலி

image

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலை நண்டாங்கரைப் பகுதியில் சென்ற போது காா் கட்டுப்பாட்டை இழந்து 200-அடிப்பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் சென்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அவசர ஊா்தியில் 4 பேரையும் மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பைஜூா் ரகுமானை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

News May 20, 2024

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குழப்பம்

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு எல்லை விரிவாக்கத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார் நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன் கோட்டை சேர்க்கப்பட்டால் குழப்பம் நீடிக்கிறது.  கடந்த 2014ல் திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, எல்லை விரிவாக்க பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் பிள்ளையார் நத்தம் நீக்கம் காரணமாக இங்கு பணியில் தொய்வு ஏற்பட்டது.

News May 20, 2024

திண்டுக்கல்: கோயில் திருவிழாவில் கலவரம்

image

வத்தலக்குண்டு அருகே கோயில் தேரோட்டத்தின் போது இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் கிராமத்தில் புகுந்து பொதுமக்களை தாக்கியதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News May 19, 2024

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பூச்சொரிதல் விழா

image

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன் ஶ்ரீ லெட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழாவிற்கு பூவால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காளியம்மன் மற்றும் பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பூந்தேரினை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.

News May 19, 2024

திண்டுக்கல்: திரளும் மேக கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 48 மணி நேரத்திற்குள் அடைமழை பொழியும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று காலை முதலே வெயில் ஏதுமின்றி அமைதியாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன் கருமேகங்கள் சூழ, மழை பொழிவதற்கே அறிகுறியாக மக்களை மிரட்டி வருகிறது. பயங்கர மழை தாக்கத்தை கண்டு ரோட்டோர வியாபாரிகள் கடை விரிப்புகளை எடுத்து கொண்டு கிளம்பும் நிலை தொடர்கிறது.

News May 19, 2024

பழனி: தனியார் விடுதிகளில் அதிரடி சோதனை

image

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தனியார் விடுதிகளில் தங்கி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், இன்று தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது முறையான ஆவணங்கள் இல்லாமல் அறை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவைகளை நகர் சார்பு காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன.

News May 19, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை அளவு விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவை வேடசந்தூரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் திண்டுக்கல்(0)- கொடைக்கானல் ரோஸ் கார்டன்(-10)-பழனி (21)-நத்தம் (0)- நிலக்கோட்டை(0)- வேடசந்தூர்(0)- மத்திய புகையிலை ஆராய்ச்சி மையம் (p)- கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா (-15. 6)- என மழை பதிவாகியுள்ளது.

News May 19, 2024

திண்டுக்கல்: கனமழை எதிரொலி!

image

மக்கள் மழை பாதிப்புகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை உடனடியாக மீட்கும் வகையில் திண்டுக்கல், வத்தலகுண்டு, வேடசந்துார், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மீட்பு பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளில் யாரேனும் சிக்கினால் 94450 86325ல் 24 மணி நேரமும் அழைக்கலாம்.

error: Content is protected !!