Dindigul

News May 21, 2024

கொடைக்கானல் படகுப் போட்டி ரத்து!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று(மே 21) நடைபெறவிருந்த படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மே 25ம் தேதி படகுப் போட்டி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

புத்துயிர் பெரும் திண்டுக்கல் பூட்டு!

image

திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து திண்டுக்கல் பூட்டுக்கு ஆர்டர்கள் குவிவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆட்கள் தேவை அதிகம் இருப்பதால் இளைஞர்கள் பூட்டுத் தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். வரும் தலைமுறை இளைஞர்கள் பூட்டுத்தொழிலை ஆர்வம் எடுத்து செய்து திண்டுக்கல் பெருமையை நிலைநாட்ட வேண்டும் எனவும் பேசப்படுகிறது.

News May 21, 2024

திண்டுக்கல்: கோயிலில் பேனர் வைத்த இஸ்லாமியர்கள்!

image

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் இன்று(மே 21) நடைபெறும் கோயில் வருஷாபிஷேக விழாவுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் சீர் வரிசையுடன் பங்கேற்கும் இந்த விழா மத நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மேலும், இந்த விழாவில் அனைவரும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 20, 2024

திண்டுக்கல் : நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

திண்டுக்கல்: தகாத உறவு: கொலை முயற்சி

image

வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியபட்டி பகுதியில் உள்ள கோழி பண்ணையில் காவலாளியாக வேலை பார்க்கும் பாரிச்சாமி (45).  அவரது மனைவி பரிமளா (40) அவர்களுக்கு மூன்று பெண் குழந்தை உட்பட நான்கு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்,  கணவரை கள்ளக்காதல் காரணமாக கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற பரிமளாவை இன்று வேடசந்தூர் போலீசார்  கைது செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

News May 20, 2024

திண்டுக்கல்: கனமழைக்கு வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

திண்டுக்கல்: இன்று மாலை அவசர ஆலோசனை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று, இன்றும் சில இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து வருவாய்த்துறையினரிடமும் , மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீயணைப்பு துறை அலுவலர்களுடனும் , காவல்துறை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு அவசர ஆலோசனை நடக்க உள்ளது.

News May 20, 2024

பழனி: சாலையில் நிற்கும் வாகனங்களுக்கு எச்சரிக்கை

image

பழனி அடிவாரம் பழனி ரவுண்டான சாலை, ஐயம்புள்ளி சாலை, பாலசமுத்திரம் செல்லும் சாலை ஆகிய சாலைகளில் வாகனங்கள் நிற்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது .
மேலும் அப்படி வாகனங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்தினால் காவல் துறை மூலமாக அந்த வாகனம் லாக் செய்து பறிமுதல் செய்யப்படும் என பழனி உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

கோயிலுக்கு குதிரை வண்டியில் வந்த பக்தர்கள்

image

பழனி முருகன் கோயிலுக்கு வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள உடுமலையில் இருந்து குதிரை வண்டியில் இன்று பக்தர்கள் வருகை தந்தனர். மலையடிவாரத்தில் குதிரை வண்டிகளை அனுமதிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். கிரிவலப் பாதைக்கு வெளியே வண்டிகளை நிறுத்திவிட்டு நடை பயணமாக மழையை சுற்றி வந்தனர். பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் வருவதை பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

News May 20, 2024

தனியார் விடுதிகளுக்கு எச்சரிக்கை

image

பழனியில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விடுதிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு விசாரணை செய்யாமல், அடையாள அட்டை பெறாமல் அறை வழங்கக் கூடாது. தவறுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைக் கண்காணிப்பாளர் தனஜெயன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!