India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பி. என். கல்லுப்பட்டியில் இன்று காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு இரண்டு ஆண்கள் மணமக்கள் போன்று வேடம் அணிந்து தாரை தப்பட்டை முழங்க ஒவ்வொரு வீடுகளாக சென்று திருவிழாவிற்காக நிதியை வாங்கினர். திருவிழாவை நடத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் வங்கி மின் இணைப்பு அறையில் தேவாங்கு ஒன்று இருந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள், மின் இணைப்பு அறையில் பதுங்கி இருந்த தேவாங்கை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் விட்டனர்.
பழனி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று(மே 21) நடைபெற்றது. இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 28,926 ரொக்கம் கிடைத்தது. தங்கம் 545 கிராம், வெள்ளி 8,490 கிராம், வெ.கரன்சி 362 கிடைத்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மே.22) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது.
திண்டுக்கல்லில் தொடர் மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. நாளை வைகாசி விசாகத்தை முன்னிட்டும் பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ ரூ.500, ஜாதிப்பூ ரூ. 400, கனகாம்பரம் ரூ.500, சம்பங்கி ரூ.70, செண்டு மல்லி ரூ.80,கோழிக்கொண்டை ரூ.70, அரளி ரூ.170, ரோஸ் ரூ.120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வேடசந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், வெளி நோயாளிகள், வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு முன்பு உள்ள வளாகத்தில் சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர். அவசர காலத்தில் நோயாளிகள் ஏற்றி வரும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மருத்துவமனை முன்பு உள்ள வளாகத்தில் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில், ஆத்துார்- 28,319, திண்டுக்கல்(கிழக்கு)- 62,429, திண்டுக்கல்(மேற்கு)- 51,676, குஜிலியம்பாறை- 21,301, கொடைக்கானல்- 20,176, நத்தம்- 32,968, நிலக்கோட்டை- 54,872, ஒட்டன்சத்திரம்-34,303, பழனி-53,772, வேடசந்தூர்-40, 617 மகளிரும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,00,433 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கொடைக்கானலில் மூஞ்சிக்கல் என்ற பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் குழந்தை மற்றும் தாய் சிக்கினார். வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மிகவும் பத்திரமாக மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.