India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் நகரில் நேற்று இரவு வேடப்பட்டியில் மாயாண்டி ஜோசப் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். உடனடியாக விசாரணை துவங்கிய திண்டுக்கல் தாலுகா போலீசார் மாயாண்டி ஜோசப் என்பவர் அடியனூத்து ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், மேலும் இவர் திமுக பிரமுகர் என காவல்துறையின் முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை காவல் துறை தேடி வருகிறனர்.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி, முருங்கை, பீன்ஸ் ஆகியவற்றின் விலை உயா்வு கடந்த வாரம் ரூ.250-க்கு விற்ற 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.450-க்கும், ரூ.16-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.30-க்கும், ரூ.130-க்கு விற்ற பீன்ஸ் ரூ.175-க்கும் விற்பனையானது. சேனைக்கிழங்கு கிலோ ரூ.65, பந்தல் சுரைக்காய்- ரூ.20, பயிா் வகைகள் ரூ.30, சின்ன வெங்காயம்- ரூ.25 முதல் ரூ . 52 வரை விற்கப்பட்டன.
வேடசந்தூர் அருகே உள்ள வளவி செட்டிபட்டி வேலகம்மாள் நாகையா சாமிகள் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. நான்கு வேள்வி கால பூஜைகள் நிறைவுற்ற நிலையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக காளைகள் மாலை தாண்டும் நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 300 க்கும் மேற்பட்ட காளைகள் 9 மந்தைகளுக்கு அழைத்து வரப்பட்டது.
திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் தி.மு.க பிரமுகர் மாயாண்டி ஜோசப். இவர் மதுபானக்கடை அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளனர். போலீசார் அவரது உடலை சற்றுமுன் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர் குஜிலியம்பாறை ஆர் வெள்ளோடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 15 ஆடுகள் பலியானது. இதனால் அப்பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கடிதம் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து அதிக மனுக்கள் வந்தால் குளுக்கல் முறையில் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். சிபாரிசு மூலம் சேர்க்கை நடைபெறக்கூடாது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத் தொழில் உள்ள எந்த ஒரு அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கூடாது எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17ஆம் தேதி மலா் கண்காட்சி, கோடை விழா தொடங்கியது. டாபா்மேன், பப்பி, ஃபாரிட்டன் உள்ளிட்ட 12 வகையான சுமாா் 70 நாய்கள் பங்கேற்றன. நாய்களுக்கு 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் நாயின் தோற்றம், செயல்பாடுகள், கீழ்ப்படிதல், சாகசம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய நாய்கள் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டன .
கொடைக்கானல் அருகே மலைக்கிராமங்களான சின்னூர் மற்றும் பெரியூர் பகுதியில் பெய்த கனமழையால் கல்லாறுஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், சின்னூரை சேர்ந்த சிலர் பெரியகுளம் சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கி உயிருக்கு போராடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய 4 பேரையும் கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்
Sorry, no posts matched your criteria.