India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 7,8,9,11ம் வகுப்பு விளையாட்டு விடுதி மாணவிகளுக்கான மாநில கால்பந்து போட்டிகளுக்கான தேர்வு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் நோயலின் ஜான் தலைமையில் நடந்த இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார்.
பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு 12 பேருடன் சுற்றுலா சென்ற வாகனம் வேடசந்தூர் தம்மனம்பட்டி அருகே வந்த போது சேலத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் ஜெய்ஹிந்த் செண்பகராமன் 90 ஆம் ஆண்டு நினைவு தினம், வீர சாவர்க்கர் 142 ஆவது பிறந்த தினம், ராஷ்பிஹாரி போஸ் 139 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு முப்பெரும் தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத நபர்களைக் கண்டறிந்து கல்வியறிவு வழங்கும் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027” ஐந்தாண்டுத்திட்டமானது கடந்த 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் அனைவரும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் அடுத்துள்ள வில்பட்டி ஊராட்சி பகுதியில் புலியூர் கோம்பை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் இன்று முகாமிட்டுள்ளதால், இன்று மாவட்ட வனத்துறை சார்பில் யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட முடிவு செய்துள்ளனர். இதற்கான, ஏற்பாடு இன்று மதியம் முதல் நடைபெற உள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது.
கொடைக்கானலில் ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது தரை இறங்கும் மேக கூட்டம், முத்தமிடும் சாரல், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் என கொடைக்கானல் நகர் சுற்றுலா பயணிகளை இயற்கை சூழலால் ஈர்த்துள்ளது. நேற்று காலை முதலே இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்த போதும் ஏரியில் சுற்றுலா பயணிகள் நனைந்தும் , குடை பிடித்தப்படியும் படகுசவாரி செய்தனர்
தொடா் மழை காரணமாக பழனி சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ராமசாமி கூறியதாவது, தொடா் மழையால் நெல் பயிா்கள் அனைத்தும் பாழாகிவிட்டன . எனவே, மாவட்ட நிா்வாகம், வருவாய்த்துறை, வேளாண் துறை அதிகாரிகள் இந்த நிலங்களை ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும். என்றார் .
பூம்பாறை, கொடைக்கானல் ஏரியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மலைப்பூண்டு விவசாயத்தில் புகழ்பெற்ற இந்த பூம்பாறை கிராமம் பழனி மலையின் ஒரு பகுதியாகும். இது 1920 மீ உயரத்தில் அடுக்கடுக்கான வயல்களுக்கும் பசுமைக்கும் மத்தியில் அமைந்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான புராணக் கதைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் குழந்தை வேலப்பர் கோயில் இங்கு அமைந்துள்ளது சிறப்பாகும். இயற்கையின் அமைதியை இங்கு காணலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.24) மதியம் 1 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம், பாலாஜி ரவுண்டானா, பாலசமுத்திரம் செல்லும் வழி போன்ற இடங்களில் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை வாகனங்களை நிறுத்தினால் லாக்கப் செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதே போன்று பொதுமக்களுக்கும், அவர்களுக்கும் செல்ல இடையூறாக சாலையில் கடைகள் அமைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று பழனி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் எச்சரிக்கை.
Sorry, no posts matched your criteria.