India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத நபர்களைக் கண்டறிந்து கல்வியறிவு வழங்கும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 இல் சேர்ந்து எழுத்தறிவு பெறாத நபர்களுக்கு கல்வியறிவு வழங்கிட விருப்பமுள்ள தன்னார்வலர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, கோவிலூர் பகுதியில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாலு பாரதி (46). இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் இன்று இவரை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பாலு பாரதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பழனி மகாலில் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து காவலர்களுக்கு Emergency Day விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில் விபத்து ஏற்படும்போது காவல்துறையினர் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் தலைமையிலான குழுவினர் காவல் துறையினருக்கு CPR உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலை ஏ.பி.சி.டி. என தரம் வாரியாக பட்டியலிட்டு கண்காணிக்க தென் மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மேற்பார்வையில் ரவுடிகள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகிறனர். இதனால், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
நத்தம் அருகே சாலையில் குறுக்கே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இன்று சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்த தகவல் அறிந்த நத்தம் காவல் துறையினர் ஓட்டுநர் உடலை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்.
எப்போது கேட்கும் இடி முழக்கம் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று தனியார் ஹாலில் நடைபெற்றது. புத்தகத்தை சமூக ஆர்வலர் நாட்டாமை காஜாமைதீன் வெளியிட அதனை துளிர் இயக்கம் நிர்வாகி முகமது யூசுப் அன்சாரி பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்புரை ஆற்றினர். இதில் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலக்கோட்டையை அடுத்த விருவீடு பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து(35) என்பவரை கடந்த 3 ஆம் தேதி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் இவரது குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
பழனி தாலுகா, அய்யம்பாளையம் அருகில் மேற்கு தொடர்ச்சியில் பெய்து வரும் கனமழையால் பரப்பலாறு நீர்மட்டம் உயர்ந்து வந்து இன்று உபரி நீர் வெளியேறுவதால் பழனி வரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இந்த அணையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
மின் கட்டணம் தொடர்பான போலி SMS மீண்டும் உலா வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி போலி SMSஇல் இருக்கும் எந்த லிங்கையும் க்ளிக் செய்ய வேண்டாம். அதில் இருக்கும் எண்ணைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதே நல்லது. மின்கட்டணத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே செலுத்த வேண்டும். உதவிக்கு, 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது
வேடசந்தூா் அருகே நேற்று லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் பெங்களூருவைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா். இதில் ஓட்டுநா் கிரேன் உள்ளிட்ட12 பேரும் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு , வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் 6 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
Sorry, no posts matched your criteria.