Dindigul

News May 28, 2024

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு

image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் சார்பில் இந்த சில மாதங்களுக்கு முன்பாக அறநிலையத்துறை சார்பில் அகில உலகம் முருகன் மாநாடு நடத்த உள்ளது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று வரும் ஆகஸ்ட் மாதம் 24, 25, அன்று முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடத்த உள்ளது என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.

News May 28, 2024

பாலியல் வழக்கில் 24 ஆண்டுகள் சிறை தண்டனை

image

சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அஞ்சுகுழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(34) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இன்று குற்றவாளி கார்த்திக்கிற்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News May 28, 2024

பழனி மலை ரோப் கார் சேவை நிறுத்தம் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் உள்ள ரோப் கார் (கம்பி வடம் ) சேவை 30.05.2024 மாதாந்திர பராமரிப்பு காரணமாக அன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் இன்று அறிவித்துள்ளது. வழக்கம் போல இழுவை ரயில் சேவை தொடரும் எனவும், அன்று ஒரு நாள் அந்த சேவையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 28, 2024

மாம்பழம் குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

image

திண்டுக்கல், பழனி சட்டமன்றத் தொகுதி ஆயக்குடி பகுதியில் பழங்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த பழங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News May 28, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும்
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி,
தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

அக்னிவீர் வாயு தேர்வு – ஆட்சியர் அறிவிப்பு

image

அக்னிவீர் வாயு தேர்விற்கு பெங்களூரில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற வுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு https://agnipathvayu.cdac.in இணையத்தில் 05.06.2024 வரை பதிவு செய்யலாம். முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார். 

News May 28, 2024

திண்டுக்கல்: தனியார் ஓட்டல் நீச்சல் தொட்டிகளில் ஆய்வு

image

திண்டுக்கல் நகரில் செயல்படும் உயர்தர தனியார் ஓட்டல்களில் உள்ள நீச்சல் தொட்டிகள் முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதா , பராமரிக்கப்படுகிறதா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு திட்டமிடுநர் ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பழனி ரோடு, மெங்கில்ஸ்ரோடு உள்ளிட்ட நகரில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் உயர்தர தனியார் ஓட்டல்களில் கேட்டறிந்தனர்.

News May 28, 2024

வேடசந்தூர் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

image

வேடசந்தூர் அருகே உள்ள நல்ல பொம்மன்பட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் (40). இவர் ஆந்திராவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார. விடுமுறைக்காக ஆந்திரா சென்ற நிலையில், ஆந்திராவில் இருந்து வேடசந்தூர் வந்தபோது, பாப்பலபட்டு என்ற இடத்தில் லாரி மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் சாமிநாதன், அவரது மகன், மகள் மற்றும் அண்ணன் மகன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

News May 28, 2024

திண்டுக்கல்: நிவாரணம் வழங்க கோரி மனு

image

திண்டுக்கல் பகுதிகளில் தொடா் மழையால் நெல், மக்காச்சோளப் பயிா் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பீடுடன் , நிவாரணமும் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமசாமி, தலைவா் பெருமாள் ஆகியோா் பங்கேற்றனர்

News May 27, 2024

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனிக்கை துறை அலுவலகத்தில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக அடிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

error: Content is protected !!