India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில்
37,716 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில், பழனி மலைகளில் அமைந்துள்ளது அழகிய தலையாறு அருவி என்னும் எலிவால் அருவி. கொடைக்கானல் காட்டுச் சாலையில் டம் டம் பாறையிலிருந்து மேற்கு திசையில் 3.6 கிமீ தொலைவில் பயணித்தால் இந்த அருவியைக் காண முடியும். இதன் மொத்த உயரம் 975 அடியாகும். இந்த அருவிக்கு அவ்வளவு எளிதில் பொதுமக்களால் செல்ல இயலாது. அடர் பச்சை நிறத்தில் சுற்றிலும் மலைகளும் கருப்பு பாறைகளாலும், இந்த அருவியின் அழகை அதிகரிக்கிறது.
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் விஜயகுமார் அவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை வடமதுரை காவல்துறையினரை கைது செய்யாததால் அதை கண்டித்தும் உடனடியாக குற்றவாளியை கைது செய்யக் கோரியும் இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளனர். மேலும் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர்.
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் 50 மருத்துவமனைகளில் முதல் கட்டமாக 19 மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், இராமலிங்கம் பட்டியில் அருள்பாலிக்கும் பாதாள செம்பு முருகன் கோயிலில் இன்று சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பாதாள செம்பு முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறுமலை செட் மார்க்கெட்டில்
தற்போது பலாப்பழ சீசன் களைகட்டியுள்ளது. சிறுமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட பழங்கள் மட்டுமல்லாது, நாட்டு பழங்கள், புதுக்கோட்டை பழங்கள், பண்ருட்டி பழங்கள், கேரளா பழங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் பலாப்பழங்கள் வரத்து இருந்தது. காலை 6 மணிக்கு வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். முதல் நாளிலேயே சிறுமலை பலாப்பழம் ரூ.1000 வரை ஏலம் போனது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் அனைத்து பொது சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார்மய பணியாளர்களுக்கு தினசரி வார்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆணையர் எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் மாநகர் நல அலுவலர், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத ரூ. 1.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் வைரவன். இவரது மனைவி பார்வதி(28). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளன. சற்றுமுன் ஆண்டிப்பட்டி பிரிவு மூன்ரோடு பகுதியில் பார்வதி மர்ம நபர்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானலில் கடந்த மாதம் பேரிஜம் ஏரி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்திருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள்
நிறைவடைந்ததால் ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரியை நாளை முதல் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.