Dindigul

News May 30, 2024

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

image

திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் பலியானார். இவரது மனைவி விஜி (35), கணவர் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 30, 2024

திண்டுக்கல்: முள்புதரில் இறந்து கிடந்த பெண் சிசு 

image

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் தோப்புப்பட்டி குடியிருப்பு அருகே பெட்ரோல்  பங்க் உள்ளது. அதன் பின்புறம் 8 மாத பெண் சிசுவின் உடல் முள்புதரில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெட்டியாா்சத்திரம் போலீசார் இறந்த சிசுவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். \போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 30, 2024

பட்டப் படிப்புக்கு மாணவிகள் சேர்க்கை

image

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற 4683 மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை, இளம் அறிவியல் என 13 பாடப் பிரிவுகளில் மொத்தம் 880 இடங்கள் உள்ள நிலையில் 4683 விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளன. இதையடுத்து கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. கலந்தாய்வில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

News May 30, 2024

எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி

image

திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: எண்டோஸ்கோப்பி என்பது இரைப்பையில் உள்ள திசுக்களின் நோய்களை கண்டறிய பயன்படுகிறது. ஆனால், அல்ட்ராசவுண்ட் மூலமாக குடலின் தோல் பகுதி மற்றும் வெளிப்புற திசுக்களின் நிலையை கண்டறியலாம் என தெரிவித்திருந்தனர்.

News May 30, 2024

திண்டுக்கல்: இருமடங்கு விலை உயர்வு

image

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு கொத்தமல்லி
ஓசூரிலிருந்து நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடை கொண்ட 200 சிப்பம் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது 100 சிப்பம் மட்டுமே வருகிறது. இதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
15 நாட்களுக்கு முன்பு வரை 700 முதல் 900 கிராம் எடை கொத்தமல்லி கட்டு ரூ.50க்கு விற்ற நிலையில், தற்போது வரத்து குறைவால் மொத்த விற்பனையில் ரூ.150, சில்லறையில் ரூ.180 விற்பனையாகிறது.

News May 30, 2024

கொடைக்கானல் : விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைவு

image

கொடைக்கானலில் பிளம்ஸ் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் விலை சரிந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொடைக்கானல் பெரும் பள்ளம், மேல்பள்ளம் , பெருமாள்மலை, வில்பட்டி,  பேத்துப்பாறை, வட கவுஞ்சி ஆகிய மலைப் பகுதிகளில் பிளம்ஸ் சாகுபடி செய்யப்படுகிறது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பிளம்ஸ் விளைச்சல் அதிகமாக இருக்கும் கடந்த ஆண்டு 1 kg 90 க்கு விற்பனையானது தற்போது 80 க்கு விற்பனையாகிறது.

News May 30, 2024

பேரிஜம் ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

image

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட ஒரு மாதத்துக்குப் பிறகு வனத்துறை நேற்று அனுமதி அளித்தது. பராமரிப்புப் பணிகள், யானை நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு மாதமாக பேரிஜம் ஏரிப் பகுதி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரு மாதத்துக்குப் பிறகு பேரிஜம் ஏரிப் பகுதிக்கு செல்ல வனத்துறையினா் அனுமதி அளித்தனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News May 29, 2024

பாலியல் வழக்கில் வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை

image

பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழனியைச் சேர்ந்த சஞ்சய்(21) என்பவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று குற்றவாளி சஞ்சய்க்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு

image

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் தோப்புப்பட்டி காலனி அருகே காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று இருப்பதாக இன்று ரெட்டியார்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 29, 2024

ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறலாம்

image

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சொர்ண ஆகர்சன பைரவர் தேய்பிறை அஷ்டமி சிறப்பு ஆறு கால பூஜை நாளை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அதற்கான டிக்கெட்டை பெற வரிசையில் நின்று காத்திருக்காமல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!