India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல்: பிப்.2 1946ஆம் ஆண்டு. அப்போது மகாத்மா காந்தி தனது கடைசி தென் இந்திய பயணத்தில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்லா ஊர் ஸ்டேஷனிலும் காந்தியடிகளின் ரயில் நிற்காது. அதனால், மகாத்மாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் இருந்த சின்னாளப்பட்டி மக்கள் ரயில்வே சிக்னலை மாற்றி அமைத்து மகாத்மா ரயிலை தங்கள் ஊரில் நிறுத்தச் செய்தனர்.
திண்டுக்கல்: ஆத்தூர் காமராஜர் அணை அருகே கரடு முரடான மலைப் பாதையில் அமைந்துள்ள சடையாண்டி மலைக்கோயில் 700 ஆண்டுகாலம் பழமையானது. இந்தக் கோயிலுக்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். குகைக் கோயிலான இந்தக் கோயிலில் எந்த வேண்டுதலை வைத்தாலும் நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
கிராமத்து வாழ்வியலுக்குள் தமிழ் சினிமா சென்றது ஒரு பெரிய பரிணாம வளர்ச்சி என்றே சொல்லலாம். அதில், பெரும்பாலான படங்கள் உருவாக்கப்பட்ட தெருக்கள், வீடுகள் கூட இன்னும் அப்படியே இருக்கும் ஓர் இடம் தான் திண்டுக்கல்லில் உள்ள சின்னாளப்பட்டி. ஆம், ’ஆட்டோகிராப்’திரைப்படத்தில் வரும் ஞாபகம் வருதே பாடல் இடம்பெற்ற தேவாங்கர் மேல் நிலைப் பள்ளியின் வாசலில் இன்னும் அந்தப் பாடல் இசைக்காமலே ஒலிக்கிறது.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (28.3.25) தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10,838 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9,761 மாணவர்கள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 4,523 மாணவர்கள் என மொத்தம் 25,122 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டங்கில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 5 கட்டங்களாக பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சி காலை 7 முதல் 5 மணி வரை நடைபெறும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். திண்டுக்கல் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க, SHARE பண்ணுங்க.
கொடைக்கானலில் காட்டேஜ் உரிமையாளர் எரித்துக்கொலை செய்யப்பட்டதில் மதுரையை சேர்ந்த மேலும் ஒருவர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சம்பளம் சம்பந்தமாக தகராறு ஏற்பட சிவராஜனை கொலை செய்து உடலை காட்டேஜ் அருகே எரித்தனர். போலீசார், மதுரை தத்தனேரி மணிகண்டனை கைது செய்த நிலையில், மதுரை செக்கானுாரணியை சேரந்த அருண் (28) கொடைக்கானல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான 10 சுற்றுலாத் தலங்களைப் பார்ப்போம். 1. மலைக் கோட்டை 2.கோட்டை மாரியம்மன் கோயில் 3. கொடைக்கானல் 4. சிறுமலை 5. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் 6. சின்னாளப்பட்டி 7. பழனி ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயில் 8. தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில் 9. ஐவர் மலை 10. ஆத்தூர் காமராஜர் அணை. SHARE IT!
சாணார்பட்டி அருகே சோழகுளத்துப்பட்டி சேர்ந்த தேவசங்கிலி. இவரை இவரது தம்பி ஹரிஹரன் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாணார்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோடை காலம் முன்னரே திண்டுக்கல்லில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (share பண்ணுங்க)
தமிழகத்தில் இன்று (27.3.25) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், திருப்பூர் கோவை, நீலகிரி உள்ளிட்ட மமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மக்களே உங்க ஊரில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க. Share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.