Dindigul

News May 31, 2024

திண்டுக்கல் இன்று மழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல்லில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

திண்டுக்கல்: 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல்லில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

நீதிமன்ற வளாகத்தில் பிடிபட்ட 5 அடி நீள பாம்பு

image

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற கிழக்கு நுழைவாயில் பகுதியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி சுமார் 5 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

News May 31, 2024

BREAKING யானைகள் முகாம் – ஏரிக்கு செல்லத் தடை

image

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் தற்போது பானைகள் முகாமிட்டுள்ளதால் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

News May 31, 2024

400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

image

ஆத்தூர், ஜே.புதுக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் சாதிக், ஜோதிமணி, முருகன் ஆகியோா் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தனா். அப்போது திண்டுக்கல்லைச் சோ்ந்த பாண்டியராஜன் என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News May 31, 2024

திண்டுக்கல்: பணிமனைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்!

image

திண்டுக்கல் கிளை-3வது பணிமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதியை, திண்டுக்கல் கோட்ட மேலாளா் ரமேஷ் பயன்பாட்டுக்கு நேற்று தொடங்கி வைத்தாா். தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன், மண்டல அலுவலகத்திலுள்ள புதுப்பிக்கும் பிரிவு, திண்டுக்கல் கிளை-1 ஆகிய இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில் வணிக மேலாளா் சக்தி, தொழில்நுட்ப மேலாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News May 30, 2024

கம்யூனிஸ்டு கட்சியை கண்டித்து வால் போஸ்டர்

image

வேடசந்தூர் SAB நகர் பட்டா இடத்தை அபகரிக்க துடிக்கும் வேடசந்தூர் கம்யூனிஸ்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, மாநில, மாவட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகத்தை கண்டித்து அந்த சொத்தின் உரிமையாளர் தனது செல் நம்பருடன் சேர்த்து வால்போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இது வேடசந்தூர் பகுதியில் பெரும் வைரலாகி வருகிறது.

News May 30, 2024

திண்டுக்கல் அருகே விபத்து

image

திண்டுக்கல்: வேடசந்தூர், வடமதுரையிலிருந்து இன்று திருச்சி நோக்கி சென்ற மணல் லாரி ஓட்டுனர் சந்துருவின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற பிக்கப் வேன் மீது மோதி வேன் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் வடிவேல் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கிளீனர் அம்மாவாசை (50) படுகாயமடைந்தனர். இவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். 

News May 30, 2024

திண்டுக்கல்: காலியான தங்கும் விடுதிகள்

image

தமிழ் கடவுள் முருகனின் பெருமையை உலகம் எங்கும் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழனியில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்து உலகை முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்கள், பக்தர்களை தங்க வைப்பதற்காக பழனி மற்றும் திண்டுக்கல் உள்ள தங்குமிடம், கோயிலுக்கு சொந்தமான தங்குமிடம் என அனைத்து அறைகளும் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி உள்ளன.

News May 30, 2024

போக்சோ வழக்கு: வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

image

திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது (எ) அல்ஆசிக் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் இன்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  குற்றவாளி ஆசிக் முகமது (எ) அல்ஆசிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். 

error: Content is protected !!