Dindigul

News June 2, 2024

இருசக்கர வாகனத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு

image

திண்டுக்கல் குமரன் திருநகரில் இன்று குருசாமி என்பவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பு ஏறியது. வண்டியை நகற்ற முயன்ற போது பாம்பு இருப்பதை அறிந்த குருசாமி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டு பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

News June 2, 2024

திண்டுக்கல் பஞ்சு தொழிற்சாலையில் தீ விபத்து

image

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள செட்டிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் கழிவு பஞ்சுகளில் இருந்து நூல் தயாரிக்கும் பஞ்சாலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் ஏராளமான பண மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

News June 1, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

காட்டுப் பன்றி இறைச்சி பதுக்கியவர் கைது

image

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சின்னாளபட்டி அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (28). இவர் தனது வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அங்கு சென்ற வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அங்கு பன்றி இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஸ்டீபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 1, 2024

திண்டுக்கல் குணா குகை சிறப்புகள்!

image

கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள குணா குகை, முன்னதாக ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று அழைக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்திற்கு பின்னரே குணாகுகை என்றானது. மோயர் பாயிண்ட் சாலையில் அமைந்துள்ள இந்த குகை தேவதாரு காடுகளின் வழியாக நடந்து செல்ல வேண்டும். ஆனால் பாதுகாப்புக்காரணங்களுக்காக அந்த குகை, தடைசெய்யப்பட்டுள்ளது. புராணக்கதைகளிலும் இந்த குகை பற்றி குறிப்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

News June 1, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள் தயார்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு திண்டுக்கல்  பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது என  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

திண்டுக்கல்: வழுக்கு மரம் ஏறி விழுந்தவர் உயிரிழப்பு

image

நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி அருகே உள்ள கம்பிளியம்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று(மே 31) வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில் கணவாய் பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(30) மரம் ஏறும்போது வழுக்கி கீழே விழுந்தார். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

News June 1, 2024

கொடைக்கானல்: படகிலிருந்து தவறி விழுந்தவா் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூண்டி ஏரியில், ஜான் ஐசக் என்பவர் நேற்று(மே 31) படகிலிருந்து தவறி விழுந்தார். தொடர்ந்து, நீரில் மூழ்கிய ஜானை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனா்.

News June 1, 2024

திண்டுக்கல் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

image

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் SK.நகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டி இரட்டை விபத்து ஏற்படுத்திவிட்டு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் தப்பி ஓடியுள்ளார். அவரை கைது செய்ய வலியுறுத்தியும், விஜயக்குமாருக்கு ஆதரவாக உண்மையை மறைத்து புனைவழக்கு பதிந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அப்பாவிகளை கைது செய்வதைக் கண்டித்தும் பொதுமக்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News May 31, 2024

குடிபோதையில் விபத்து, பொதுமக்கள் சாலை மறியல்

image

குடிபோதையில் வாகனம் ஓட்டி இரட்டை விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வழக்கறிஞர் விஜயகுமாரை கைது செய்ய வலியுறுத்தியும் விஜயக்குமாருக்கு ஆதரவாக உண்மையை மறைத்து புனைவழக்கு பதிந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அப்பாவிகளை கைது செய்வதைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்  அய்யலூர் SK.நகரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்து வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

error: Content is protected !!