India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 மக்களவைத் தேர்தல் திண்டுக்கல் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி 5,38,972 (46.64%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக – சிபிஐ(எம்) கூட்டணியில் ஆர்.சச்சிதானந்தமும், அதிமுக – SDPI கூட்டணியில் முகமது முபாரக்கும், பாஜக – பாமக கூட்டணியில் திலகபாமாவும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துக்குமார். இவர் இன்று அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரைஅரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அஞ்சலி பைபாஸில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் பித்தளைப்பட்டியை சேர்ந்த பித்தளை என்ற செந்தில் படுகாயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகராட்சி 23-வது வார்டு கட்சி அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மாநகர மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், தெற்கு பகுதி அவைத் தலைவர் கண்ணன், வார்டு செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டு அறிக்கையில், “நாளை நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எஸ். பி. தலைமையில் 1500- காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் 3- ஏ. டி. எஸ். பி க்கள், 12- டி. எஸ். பி. க்கள் என மொத்தம் 1500- காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கொடைக்கானலில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறும் திண்டுக்கல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 100 வியாபாரிகள் உணவு, மளிகை இறைச்சி பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் பிற்பகலுக்கு மேல் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைந்தனர் மழையால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி குதிரை சவாரி நடைப்பயிற்சி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான காளியம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பால்குடம் முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அம்மனுக்கு ஆதார் கார்டுடன் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதியில் உள்ள கோவில்களில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கோவில் திருவிழாவில் இறுதி நிகழ்ச்சியில் கரகாட்டம் நடைபெற்றது. இதில் கரகாட்ட குழுவினருடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி ஆபாசமாக நடனம் ஆடியது அப்பகுதி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் மலைக்கோயில் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவின் படி வாகனங்கள் அடிவாரப் பகுதியில் அனுமதிக்கப்படாத நிலையில் இன்று வாகனத்தில் வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் பக்தர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலூரில் சிவன் பாண்டி என்பவர் தனது பட்டியில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தெரு நாய்கள் பட்டியில் இருந்த ஆடுகளை விரட்டி சென்றதில் 20 ஆடுகள் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. இதுகுறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.