Dindigul

News June 4, 2024

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி முன்னிலை

image

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் 8764 வாக்குகளும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட SDPI கட்சி வேட்பாளர் முகமது முபாரக் 3242 வாக்குகளும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 2350 வாக்குகளும் பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

தபால் வாக்குகளில் 9.000தாண்டிய சச்சிதானந்தம்

image

திண்டுக்கல் நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் கடந்த சில நிமிடங்கள் முன்பு 5000-த்தை தாண்டிய நிலையில் தற்பொழுது நிலையில் 9- ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

திண்டுக்கல் கட்சியினருக்கு முன்னால் எம்எல்ஏ அழைப்பு

image

திண்டுக்கல் நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருவதால் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் திண்டுக்கல் காமராஜர், பெரியார் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைவரும் வருக என முன்னாள் எம். எல். எ. அழைப்பு விடுத்துள்ளார்.

News June 4, 2024

திண்டுக்கல்லில் தபால் வாக்கு எண்ணும் பணி துவக்கம்

image

திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலையில் முதல் சுற்றாக திண்டுக்கல்லில் மொத்தம் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணியானது தேர்தல் அப்சர்வர் மற்றும் திண்டுக்கல் தேர்தல் அதிகாரி பூங்கொடி அவர்கள் முன்னிலையில் துவங்கியது. இதில், உடன் முகவர்கள் உடன் இருந்தனர்.

News June 4, 2024

தபால் வாக்குகளில் சச்சிதானந்தம் முன்னிலை

image

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிட்டார். இந்நிலையில் சச்சிதானந்தம் தபால் ஓட்டில் முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

திண்டுக்கல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

18ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கும்.

News June 4, 2024

வாக்கு இயந்திர அறை திறப்பு

image

திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை.யில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திர அறையை திண்டுக்கல் தேர்தல் அதிகாரி பூங்கொடி தலைமையில் வாக்காளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

News June 4, 2024

திண்டுக்கல்: எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள்

image

திண்டுக்கல் மக்களவை தேர்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 7 ஆயிரத்து 51 பேர் ஆகும். இதில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1812 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 11 லட்சத்து 43 ஆயிரத்து 187 ஆகும். இதில், அஞ்சல் வாக்குகள் 7 ஆயிரத்து 558 ஆகும். திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

News June 4, 2024

திண்டுக்கல்லில் வெற்றி யாருக்கு?

image

2024 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மொத்தம் 74.04 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. திமுக கூட்டணி சச்சிதானந்தன், அதிமுக கூட்டணி நெல்லை முபாரக், பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.

News June 4, 2024

திண்டுக்கல்: வாக்கு எண்ணிக்கை 133 சுற்றுகள்

image

திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுகிறது. பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். மொத்தம் 133 சுற்றுகள். வாக்கு எண்ணிக்கை மேசைகள் 84, அஞ்சல் வாக்கு எண்ணிக்கை மேசைகள் 9 ஆகும். வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணி அளவில் தொடங்குகிறது.

error: Content is protected !!