Dindigul

News June 5, 2024

திண்டுக்கல் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
*சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்- 6,70,149 வாக்குகள்
*எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்- 2,26,328 வாக்குகள்
*பாமக வேட்பாளர் திலகபாமா- 1,12,503 வாக்குகள்
*நாதக வேட்பாளர் கயிலைராஜன்- 97,845 வாக்குகள்

News June 5, 2024

திண்டுக்கலில் கனமழைக்கு வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.

News June 5, 2024

திண்டுக்கல்லில் கம்யூனிஸ்டை பாராட்டிய காங்கிரஸ்

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தை,  பழனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் தலைவர் முத்து விஜயன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முருகானந்தம், மண்டல தலைவர் வீரமணி ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அனுபவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News June 5, 2024

பழனியில் விசிகவினர் கொண்டாட்டம்

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 2வது முறையாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து நேற்று(ஜூன் 4) திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

News June 5, 2024

அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்ற திண்டுக்கல் எம்பி

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 4,43,821 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று(ஜூன் 4) ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News June 4, 2024

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்

image

நாடு முழுவதும் இன்று பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 4,43,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

News June 4, 2024

4,43,821 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

image

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதி சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சச்சிதானந்தம்-670149,எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-226328,பாமக வேட்பாளர் திலகபாமா-112503,
நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-97845 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 4,43,821 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் வெற்றி பெற்றுள்ளார்.

News June 4, 2024

திண்டுக்கல் வேட்பாளர் 25வது சுற்றிலும் முன்னிலை

image

திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 25வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-6,67,391, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-2,25,492, பாமக வேட்பாளர் திலகபாமா-1,11,013, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-9,6891 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில், 4,42,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.

News June 4, 2024

திண்டுக்கல்: 26வது சுற்றிலும் முன்னிலை

image

திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 26வது சுற்று நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-6,67,744, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-2,25,733, பாமக வேட்பாளர் திலகபாமா-1,11,054, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-96,984 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில், 4,42,011 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.

News June 4, 2024

திண்டுக்கல்: 24வது சுற்று முடிவு

image

திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 24வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-6,66,787,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-2,25,220,
பாமக வேட்பாளர் திலகபாமா-1,10,956,
நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-96,745 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 4,42,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.

error: Content is protected !!