India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது கலந்தாய்வு செயற்கைப் பெற்ற மாணவ மாணவிகள் பெற்றவுடன் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொடைக்கானல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் நகர் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் தொகுதியில் இம்முறை கூட்டணிக்கு தலைமை வகித்த கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கினர் . இந்நிலையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம் போட்டியிட்டார். இவர் 4 லட்சத்து 43 ஆயிரத்து 821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் மாநிலத்தில் திண்டுக்கல் தொகுதி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிட்டார். இவர் திண்டுக்கல் தொகுதியில் சட்டப்பேரவை வாரியாக பெற்ற வாக்குகள் விபரம். திண்டுக்கல், 1,04,280, பழனி-1,03,002, ஒட்டன்சத்திரம்-1,13,647, ஆத்தூர் -1,39,319, நிலக்கோட்டை-89,361, நத்தம்-1, 17, 782 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி முருகன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்குபூஜை மலைக்கோயிலில்நடைபெற்றது . தங்கமயில் வாகனத்தில்சின்ன குமார சுவாமிபுறப்பாடு நடைபெற்றது. கார்த்திகை நட்சத்திர நாளில் அதிகளவில் பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள மஞ்சள் ஆரணிக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 57 அடி உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளனர். இதனால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மலைப்பகுதி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் வக்கம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து வடக்கம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது வந்தலக்குண்டில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
Sorry, no posts matched your criteria.