Dindigul

News June 7, 2024

குடும்ப அட்டை தாரர்களுக்கு நற்செய்தி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே-2024-ஆம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜுன்-2024-ஆம் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதிலிருந்து நாள்தோறும் 80 டன்னுக்கும் மேலாக மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. தெருக்களில் குப்பை கொட்டினாலோ அல்லது வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பை வழங்காமல் விட்டாலோ வீட்டிற்கு ரூபாய்.100, கடைகளுக்கு ரூபாய். 500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் கோலம் வரைந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

News June 7, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில மழைக்கு வாய்ப்பு

image

தென் மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ள நிலையில் இன்று 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

திண்டுக்கல்: கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம்

image

திண்டுக்கல் சாலைரோடு ஐசிஐசிஐ வங்கி அருகில் உள்ள சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் சாலையிலேயே செல்கிறது. அலுவலகம், கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் உடைகளில் படுவதால் பெறும் சிரமங்கள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர் . மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 7, 2024

பழனி: விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீஸ்

image

பழனி அருகே ஆயக்குடி, கோம்பைபட்டி மற்றும் வரதமாநதி அணை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுயானைகள் தொந்தரவு அதிகரித்துள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னை மா விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை இட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

News June 7, 2024

பாலாறு பொருந்தலாறு அணை திறப்பு

image

பழனி பகுதி பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகளுக்கு மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பாலாறு-பொருந்தலாறு அணையில் நீர் இருப்பு நேற்று ( 65 அடி) 38 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 31கன அடி நீர்வரத்து இருந்தது. இதை தொடர்ந்து அக். 10 வரை 120 நாட்களுக்கு தாடாகுளம் கால்வாய் இரண்டாம் போக பாசனத்திற்கு 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

News June 7, 2024

நத்தம்: திருமணம் ஆன 6 மாதத்தில் தற்கொலை

image

நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தநிலபர் (22). இவருக்கும், தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்த மதன்குமாருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்ட நிலபர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 6 மாதங்களே ஆனதால்,  திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

News June 7, 2024

திண்டுக்கல் : சேதமடைந்த சுவர்கள் அகற்றம்

image

திண்டுக்கல் பகுதியில் பெய்த கோடை மழையினால் பல்வேறு இடங்களில் சேதமடைந்த நிலையில் இருந்த கட்டட சுவர்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அண்மையில் கட்டணக் கழிப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவா் காயமடைந்தாா். இதனையடுத்து பேருந்து நிலையத்திலுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து, இடியும் நிலையிலுள்ள சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.

News June 7, 2024

ஆக்கிரமிப்பில் இருந்த ஊராட்சிக் கிணறு மீட்பு

image

பழனி கோதைமங்கலம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தை ராசாமணி என்பவர் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து கிணற்றை மீட்டனர். மேலும், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்று ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

News June 6, 2024

திண்டுக்கல்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!