India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை நேற்று அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளி நீர்வீழ்ச்சி பசுமைப் பள்ளத்தாக்கு, மோயர்பாயிண்ட், மற்றும் பல்வேறு பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணபட்டது. மாலை நேரத்தில் கொடைக்கானலில் அதிகமான குளிர் நிலவியது. இந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி, செய்து மகிழ்ந்தனர்.
10/10 /2024 முதல் 20/10/2024 வரை பழனி கால்நடை மருந்தகதிற்குட்பட்ட கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அனைத்து கால்நடை வளர்ப்போர் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.4 மாதத்திற்கு கீழ் உள்ள கன்றுகளுக்கு, 8 மாதம் மேல் உள்ள சினைமாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்த தேவையில்லை.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கொத்தமல்லி இலையின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது .தொடர்ந்து மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கொத்தமல்லித் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் கொத்தமல்லி கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மழை தொடர்ந்தால் கொத்தமல்லியின் விலை உயரும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி , பூஞ்சோலையில் மயான பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடை அமைக்கப்பட்டிருந்தது .
இதனால், அப்பகுதியில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டது. .எனவே பொதுமக்கள் அதை அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் உத்தரவின் பெயரில் கடை மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு நாளை ஜூன்-9ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 228 தேர்வு மையங்களில் 59 ஆயிரத்து 615 பேர் தேர்வுகள் எழுதவுள்ளனர். அதற்காக 62 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையான மியூயம் , தைக்கால், பெருமாள்மலை, மூஞ்சிக்கல், லாஸ்காட்சாலை , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சுமாா் 25-கி.மீ தூரத்துக்கு அடா்த்தியான மேகமூட்டம் காணப்பட்டது. இந்த மேக மூட்டமானது சுமாா் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நிலவியது. இதனால், மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றன.
பழனி முருகன் கோயில் கிரி வீதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவகாசம் அளித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரி வீதியை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைப்பதை யாரும் தடுக்கக் கூடாது . விசாரணை ஜூன் 24 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
திண்டுக்கல் பகுதியில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. காலை முதல் திண்டுக்கலில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின்றி காணப்பட்ட சூழ்நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
மேலும் வேலைக்குச் சென்று திரும்பிய பெண்கள் மழையினால் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் (10.6.2024) திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். மேலும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.