Dindigul

News April 1, 2025

சூடுபிடித்துள்ள ரியல் எஸ்டேட் தொழில்

image

திண்டுக்கல், ஆத்தூரில் முதல் டைட்டல் பார்க் அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடித்துள்ளது. தரிசு நிலங்கள் வீட்டு மனைகளாக பிரித்து அனுமதி பெற்று விற்பனை செய்ய தொடங்கி இருக்கின்றனர். பல்வேறு பகுதி மக்கள் ஆத்தூரை நோக்கி நிலங்களை வாங்கி வருகின்றனர்.

News April 1, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

திண்டுக்கல்லில் இன்று 31ஆம் தேதி இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை, காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதற்கான அட்டவணையை போலீசார் வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News March 31, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு துறையில் வேலைவாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் நலவாழ்வு மையங்களில், பல்வேறு பதவிகளுக்கான 38 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள், <>இந்த லிங்க்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், மீனாட்சி நாயக்கன்பட்டி, திண்டுக்கல் – 624002 என்ற முகவரிக்கு ஏப்.10-க்குள் அனுப்ப வேண்டும். இதை SHARE செய்யுங்கள்!

News March 31, 2025

திண்டுக்கல் மக்களே இன்றே கடைசி நாள்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 31, 2025

“கொடைக்கானல் போக இது கட்டாயம்”

image

ஏப்.1 தேதி முதல் இ-பாஸ் பெற்ற பிறகே கொடைக்கானல் வர வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டைப் போன்று சோதனைச் சாவடிக்கு வந்து இ-பாஸ் பெறுவதை தவிர்க்க வேண்டும். கொடைக்கானல், உதகைக்கு செல்லும் வாகனங்களுக்கு ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் ஆட்சியர் அறிவுறுத்தல். (SHARE பண்ணுங்க)

News March 31, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 30.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 29, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 29.03.2025-ம் தேதி இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டது. மேலும் திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகரம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியை நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News March 29, 2025

திண்டுக்கல்: ’ஷவர்மா’ சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு

image

திண்டுக்கல்: கொத்தப்புள்ளி பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அடுமனையுடன் கூடிய உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தனியாா் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் 30-க்கும் மேற்பட்டோா் கடந்த  வியாழக்கிழமை  ‘ஷவா்மா‘, ‘சிக்கன் ரைஸ்’ ஆகிய உணவு வகைகளை உண்டனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 30 மாணவா்களும் சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

News March 29, 2025

8th முடிச்சா போதும் ; ரூ.34,000 சம்பளத்தில் வேலை

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு, பட்டதாரிகள், டிப்லமோ முடித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யும் நபர்களுக்கு ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.10 ஆகும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் பண்ணுங்க. <<>>வேலை தேடுற உங்க ஃப்ரெண்டுக்கு ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

மகாத்மா ரயிலை நிறுத்திய சின்னாளப்பட்டி மக்கள்!

image

திண்டுக்கல்: பிப்.2 1946ஆம் ஆண்டு. அப்போது மகாத்மா காந்தி தனது கடைசி தென் இந்திய பயணத்தில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்லா ஊர் ஸ்டேஷனிலும் காந்தியடிகளின் ரயில் நிற்காது. அதனால், மகாத்மாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் இருந்த சின்னாளப்பட்டி மக்கள் ரயில்வே சிக்னலை மாற்றி அமைத்து மகாத்மா ரயிலை தங்கள் ஊரில் நிறுத்தச் செய்தனர்.

error: Content is protected !!