Dindigul

News June 10, 2024

அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

 திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் எத்தனை மாணவ, மாணவிகள் உள்ளனர், புதிய மாணவர்கள் சேர்க்கை எத்தனை என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.

News June 10, 2024

பள்ளிக்குச் செல்லாமல் மாணவர்கள் போராட்டம்

image

திண்டுக்கல் ஒன்றியம் குரும்பபட்டி ஊராட்சி, மீனாட்சிநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி சென்று வர காலை, மாலை இருவேளைகளிலும் பேருந்து இயக்க கோரி பெற்றோர்களுடன் இணைந்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் பள்ளி துவங்கும் முதல் நாளான இன்று பள்ளிக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தரையில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 10, 2024

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்

image

சேலம் மாநகர தீவிர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வந்த போது லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. விசாரணையில் உள்துறை செயலாளர் அமுதா அவரை பணிநீக்கம்  செய்ய கமிஷனருக்கு  உத்தரவிட்டார். இதனையடுத்து சேலத்தில் பணியாற்றி வந்த கணேசனை கமிஷனர் விஜயகுமாரி பணி நீக்கம் செய்துள்ளார்.

News June 10, 2024

உடல் நல குறைவால் கடலூா் சிறை கைதி உயிரிழப்பு

image

பழனிஅரசமரத்து தெருவை சேர்ந்த முத்துசாமி கொலை வழக்கில் இவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவா் கடந்த 2013ஆம் ஆண்டு கடலூா் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா். முத்துசாமிக்கு வெள்ளிக்கிழமை இரவு மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக தெரிகிறது.இதனால் கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார்.
அங்கு அவா் உயிரிழந்தார்.

News June 9, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 9, 2024

12,466  நபர்கள் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த 
குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் 228 தேர்வு மையங்களில் 59,615 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்களில் 47,149 நபர்கள் தேர்வு எழுதினர். 12,466  நபர்கள் தேர்வு எழுதவில்லை. 79.08 சதவீத நபர்கள் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

News June 9, 2024

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து அதன் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News June 9, 2024

தேர்வு மையங்களை பார்வையிட்ட ஆட்சியர்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 228 தேர்வு மையங்களில் அரசு பணியாளர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி  மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில்  நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி இன்று(09.06.2024) பார்வையிட்டார்.

News June 9, 2024

திண்டுக்கல்: வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்

image

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் ஆந்திரா, தெலங்கானா மற்றும் திண்டுக்கலை சேர்ந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் இன்று பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தந்து முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

News June 9, 2024

திண்டுக்கல்: வேட்பாளர்களுக்கு வந்த சோதனை

image

திண்டுக்கல் மக்களவை தேர்தலில் மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இதில் “நோட்டா-22, 120”,
ப.ச கட்சி நாச்சிமுத்து-4284, அ.இ.இ.மு.க தினேஷ்குமார்- 2434, சுயேச்சைகள் அங்குசாமி- 1290, அன்புரோஸ்-1012, ஆறுமுகம்-1089, சதீஷ் கண்ணா- 926, சபரிநாத் -1011, சுரேஷ்-1257, பழனிச்சாமி-949, முருகேசன் என்ற விஷ்ணு-2008, ராஜ்குமார்-4416 வாக்குகள் பெற்றனர். இந்த 11 பேரும் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகள் பெற்றனர்.

error: Content is protected !!