India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநாட்டிற்கான ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவர்கள் https://muthamizhmuruganmaanaadu2024.com என்ற இணையதளத்தில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப்பேருந்தில் சென்று பயிலும் மாணவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 2023-24 ம் ஆண்டில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி கிராமம் கோட்டையில் விநாயகர், பகவதியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு திருவிழா சாமி சாட்டுதலுடன் துவங்கியது பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிறைவு விழாவான இன்று மாரம்பாடி அந்தோணியார் ஆலய பாதிரியார்கள் சீர்வரிசை கொண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
நத்தம், வேடசந்துார், குஜிலியம்பாறை, திண்டுக்கல் மேற்கு, ஆத்துார், திண்டுக்கல் கிழக்கு, கொடைக்கானல் ஆகிய வட்டங்களில் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை https://tamilnilam.tn.gov.in/citizen ,
https://eservices.tn.gov.in என்ற
இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் கோவில் முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 66 லட்சத்து 26 ஆயிரத்து 850 வருவாயாக கிடைத்தது.
வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 427 செலுத்தப்பட்டிருந்தது .
தங்கம் 778 கிராம், வெள்ளி 12039 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் என்னும் பணி நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 231 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு தானியங்கி பணிமனையில் காலியாக இருக்கும் கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர் பயிற்சியிடங்கள் நான்கினை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு, அரசு தானியங்கிப் பணிமனையில் 14.6.2024 காலை 10 மணி முதல் 1மணி வரை நடைபெறவுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ.யில் கம்மியர் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்து இன்று மதியம் 1: 45 மணிக்கு புறப்பட்டது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில், பேருந்து ஓட்டுநர் படுகாயமடைந்தார். மேலும், இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. தரமாக வழங்கப்படுகிறதா, குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு ஆகியவை குறித்து இன்று பூதிபுரம் பகுதியில் ஆட்சியர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டமானது நான்காம் கட்டமாக ஜூன் 19ஆம் தேதி வேடசந்தூர் வட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டும் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.