India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழனியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பழனி டவுன் காவல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்துவது மற்றும் சாலையோர வியாபாரிகள் குறிப்பிட்ட இடங்களில் வியாபாரம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கன்னிவாடி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் “பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருது 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வீர, தீர மற்றும் தன்னலமற்ற செயல்கள் மற்றும் விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்படுகிறது. இதில் https://wcd.nic.in/ இணையதளம் வாயிலாக 31.07.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
பழனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் பலர் மோட்டார் சைக்கிள், சைக்கிள் மற்றும் கார் ஓட்டி பழகுகின்றனர். இந்நிலையில் இன்று கார் ஓட்டி பழகும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்தது. இதையடுத்து காரை வெளியே எடுக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக காவல்துறை 1999 பேட்ஜ் தலைமை காவலர்களுக்கு, சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 62 தலைமை காவலர்களுக்கு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமை காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
திண்டுக்கல்லில் பிரேக் பிடிக்காததால் அரசுப் பேருந்து கடைக்குள் புகுந்த விவகாரத்தில், ஓட்டுநா் பழனிச்சாமி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். விபத்துக்குள்ளான பேருந்து பெரியகுளம் கிளை பணிமனைக்குட்பட்டது. பெரியகுளத்திலிருந்து ஜூன் 10 காலை 6 மணிக்குப் புறப்பட்ட பேருந்து சுமாா் 210 கி.மீ. எவ்வித இயந்திரக் கோளாறும் இல்லாமல் இயக்கப்பட்டது. எனவே ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தகவல்.
திண்டுக்கல் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க ஒரு வாகனம் 7.29 லட்சம் வீதம் என மொத்தம் 1.67 கோடியில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு இயக்குவதற்கு தயாராக மாநகராட்சி விருந்தினர் மாளிகை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த
சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள்
தமிழக அரசின் விருது பெற, அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை https://awards.gov.in, என்னும் இணையதளம் வழியாக 20.06.2024ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களுக்கென 49 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வரை, கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., ,பாலிடெக்னிக் மாணவர்களும் சேர தகுதி உடையவர்கள். கல்லுாரி மாணவர்கள் ஜூன் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடை மழை வழக்கத்திற்கு மாறாக பெய்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.