Dindigul

News June 15, 2024

மல்லிகை பூ ரூ.1500 க்கு விற்பனை

image

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அண்ணா பூ வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல், வெள்ளோடு, நரசிங்கபுரம், குட்டத்துப்பட்டி, கன்னிவாடி, குஞ்சனம்பட்டி,  தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் நாளை சுப முகூர்த்த தினம் என்பதால் இன்று மல்லிகைப்பூ ரூ.1500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 15, 2024

திருநங்கைகளுக்கு ஆட்சியர் தகவல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக  சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News June 15, 2024

திண்டுக்கல்: ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

செம்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமியா்கள் குா்பானி கொடுப்பதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் செம்பட்டியில் நடந்த ஆட்டுச் சந்தை களை கட்டியது.10 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்கப்பட்டது.

News June 14, 2024

பாலியல் வழக்கில் 8 ஆண்டு சிறை தண்டனை

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக முகமது மஜீத் (26) என்பவரை நத்தம் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று முகமது மஜீத்துக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News June 14, 2024

பழனி: 28 இடங்களில் குடிநீர் வசதி

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு ஒருநாளைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று பக்தர்களுக்கு ஏதுவாக சோர்வை போக்கும் விதமாக சுற்றி வரும் கிரி வீதியைச் சுற்றி 28 இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News June 14, 2024

பழனி: 20 ஆண்டுகளாக தொடரும் அவலம்

image

பழனி அருகே ஆயக்குடி 1வது வார்டு பகுதி அமைந்துள்ள ஆதிதிராவிடர் காலனியில் பகுதி மக்களுக்கு நடைபாதை மற்றும் மின்சாரம் குடிநீர் வசதி என்று எதுவும் இல்லாததால் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வருவாய் துறையின் மூலம் அப்பகுதி மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

News June 14, 2024

வேடசந்தூர்: தக்காளி விலை உயர்வு

image

வேடசந்தூர் மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.100 எட்டியது. கடந்த வாரம் பெய்த மழையால் தக்காளி பயிர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேடசந்தூர் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் 20 கிலோ கொண்ட பெட்டி ரூ.700 முதல் 900 வரை விற்பனையானது. நேற்று 20 கிலோ கொண்ட பெட்டி ரூ.1,500 முதல் 2,000 வரை விற்பனையானது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனையாகிறது

News June 14, 2024

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

image

திண்டுக்கல் – திருச்சி ரோடு மேம்பாலம் அருகே கீர்த்தி கபே கடையில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த காலாவதியான பன், பிரட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று காலாவதியான பொருட்கள் வைத்திருக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

News June 13, 2024

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

image

திண்டுக்கல் கருவூல அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் கூடாது, மருத்துவ உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

News June 13, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூன்.13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!