India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜீன்.21 அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வலைதளத்தில் இன்று பொதுமக்களுக்கு ஒர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் உங்களது கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக வரும் அழைப்புகள் மற்றும் லிங்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மேலும் இதுபோன்ற புகார்களுக்கு சைபர் கிரைம் ஹெல்ப் லைன் என்: 1930 தொடர்பு கொள்ளுமாறு பதிவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நாகல் நகர் சந்தை ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் மராமத்து பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாமன்ற உறுப்பினர் சுபாஷினி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கியூட் நுழைவுத் தேர்வு மூலம் பல்வேறு முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றபின் மீதம் இருக்கும் காலி பணியிடங்களுக்கு நேரடி (Spot Admission) சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும், தகவல்களுக்கு பல்கலை.யின் அதிகாரப்பூர்வ https://ruraluniv.ac.in/ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று(ஜீன்.17) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைரோடு அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மேலும், பள்ளப்பட்டியை சோ்ந்த, பகத்சிங் உள்பட 6 போ் மீது வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனா். நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் பள்ளப்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு, கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் அரசு புறம்போக்கு பொது கிணற்றையும் , கிணற்றடி நிலத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அதில் வீடுகள் கட்டியிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை https://tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. இதில், பட்டா மாறுதல் “தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் கன்னிவாடி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் வனத்துறையினர் நேற்று கன்னிவாடி அருகே வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ஒரு ஜோடி யானை தந்தங்கள் இருந்தன.
தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் காரில் வந்த கன்னிவாடியை சேர்ந்த சோமசுந்தரத்தை 54, வன அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இவரது தகவலில் மதுரை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 3 பெண்கள் என 6 பேரிடம் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.