India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(32) என்பவரை நத்தம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளி கார்த்திக்கிற்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 31,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(32) என்பவரை நத்தம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளி கார்த்திக்கிற்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 31,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புற உலக சிந்தனையற்றோருக்கான பயிற்சி மையத்தை செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 0451-2460099 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் இயக்கப்படுகிறது. இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை (21.06.2024) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் படி வழி பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்தவும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்திய விமானப்படையில் 2024-25-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்துகொள்வதற்கு ஜூலை 8ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை <
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் நிறைவு நாளான இன்று (20.06.2024) வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை வகித்து மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நிலஅளவை) சிவக்குமார், வட்டாட்சியர்கள் சுகந்தி, சரவணன் மற்றும் தொடர்புடைய பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிவாடி பிரிவு அருகே தீப்பெட்டி ஏற்றி வந்த சரக்கு லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னிவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 வயதிற்குட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகிறது. போட்டிகள் ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, அரியலுார், திருவண்ணாமலை , திண்டுக்கல் என 8 மாவட்டங்களில் நடக்கிறது. இதில் 37 மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. முதல் சுற்று போட்டிகள் 50 ஓவர்கள் அடிப்படையில் ஒரு நாள் போட்டிகளாக நடக்கிறது.
குஜிலியம்பாறை அருகே உள்ள வடுகம்பாடி ஊராட்சி, பண்ணைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர்.
நடப்பு கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மாணவர்களே இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் எதற்கு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Sorry, no posts matched your criteria.