India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் புற உலக சிந்தனையற்ற பயிற்சி மையம் செயல்படுத்த விரும்பும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். இதில், வரும் 26-ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலவரிடம் 0451-2460099 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
வீரத்துடனும், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்பவர்களுக்கு “ஜீவன் ரக் ஷா விருது” என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விருது பெற விரும்புவோர் ஜூன்-28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 7401703504 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், வேடப்பட்டி அருகே உள்ள யாகப்பன்பட்டி மதுபான கூடத்தில் மாயாண்டி ஜோசப் என்பவர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சேசுராஜ்(39), டேனியல் ராஜா(20), அலெக்ஸ் பிரிட்டோ(20), காளீஸ்வரன்(19), பிரவீன் குமார்(19), ஸ்டாலின்(20) ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை பற்றி புகார் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண் :10581, மதுவிலக்கு பிரிவு : 78453 85637, கட்டுப்பாட்டு அறை :
9498181204, காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறை: 9498101520 இதில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ரெட்டியார்சத்திரம் அருகே இன்று(ஜூன் 22) அதிகாலை 3 மணி அளவில் பொதுமக்களை ஏற்றி வந்த டிராக்டர் மீது, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் வந்த பெரியண்ணன்(33), அழகுமலை(17) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று மாணவ, மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181 குறித்தும், திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டம் தடுப்பு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்
மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வருகின்ற 29.07.2024 முதல் 03.08.2024 வரை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. வழக்குகளுக்கு இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காணலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 0451 – 2460107 என்ற எண்ணை அழைக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கவனத்துடன் வாகனம் ஓட்டுபடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.