India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் இன்று (ஜூன் 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனைகள் நடத்தப்படும். இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விசுவநாதன் உள்ளிட்ட அதிமுக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாயப்புள்ளதாக தகவல். தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூன் 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் இருந்து ரவிச்சந்திரன் (55) தனது குடும்பத்தினருடன் வடமதுரை நோக்கி சென்றார். குஜிலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு பகுதியில் சென்றபோது, பைக் ஒன்று குறுக்கே சென்றபோது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் பெட்டி கடைக்குள் புகுந்தது. இதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் சீரிய முயற்சியால், ஆத்தூர் ஒன்றியம், சுதனாகியபுரத்தில் 8 ஏக்கரில் சுமார் ரூ.100கோடி செலவில் நவீன கட்டமைப்புடன் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.
75 % பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடியும் தருவாயில் உள்ளது. இக்கல்லூரியை விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபையில் நீர்வளத் துறை மானிய கோரிக்கையின் போது, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் பேசியதாவது, வேடசந்தூர் பகுதியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அபாயகரமான பகுதியாக மாறி உள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தவும் மக்கள் பிழைக்க வழியின்றி வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து வருவதாக தெரிவித்தார்.
திண்டுக்கல் தாலுகா, வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை அடிவாரத்தில் உள்ளது ராமக்கால் மற்றும் ஆணை விழுந்தான் ஓடை நீர்த்தேக்கம். கடந்த 16 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்தது. இந்நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவை நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் ரூ.1.58 கோடியில் ராமக்கால் ஓடை, ஆணை விழுந்தான் ஓடை சீரமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.