Dindigul

News June 26, 2024

திண்டுக்கலில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

திண்டுக்கல் உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.

News June 26, 2024

போதைப்பொருள் குறித்த தகவல் தெரிவிக்க எண் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் பற்றிய தகவலை கீழ்கண்ட 7845385637, 9176098100 எண்களில் தெரிவிக்கலாம். மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக காக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 25, 2024

போதைப்பொருள் குறித்த தகவல் தெரிவிக்க எண் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் பற்றிய தகவலை கீழ்கண்ட 7845385637, 9176098100 எண்களில் தெரிவிக்கலாம். மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் ரகசியமாக காக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 25, 2024

சட்டென்று மாறுது வானிலை

image

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 25, 2024

திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் பதவியேற்பு

image

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சச்சிதானந்தம், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 25, 2024

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்

image

செம்பட்டி வழியே திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளில்  அரசு பஸ் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.  டிக்கெட்டுகளில், ஸ்டேஜ் பெயர் தேதி போன்ற விபரங்கள் இடம்பெறவில்லை.   கட்டணத்தை மட்டும் குழப்பும் வகையில் குறிப்பிடுகின்றனர் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 

News June 25, 2024

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, 11 பயனாளிகளுக்கு ரூ.10.11 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

News June 25, 2024

பழனியில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் கடந்த 19 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை தரம் பிரித்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக 1 கோடியே 94 லட்சத்து 17 ஆயிரத்து 84 ரூபாயும் வெளிநாட்டு கரன்சி 504 நோட்டுகளும், தங்கமாக 622 கிராமும், வெள்ளியாக 12,382 கிராமும் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாளை மற்றும் மறுநாள் உண்டியல் எண்ணிக்கை இல்லை என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 24, 2024

மகாராஜா படத்தின் கதை திருடப்பட்டதாக குற்றச்சாட்டு

image

தமிழகம் எங்கும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் கதை திருடப்பட்டதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நாகன் என்ற மருதமுத்து என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விரைவில் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

News June 24, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 380 மனுக்கள்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து சுமார் 380 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!