India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மே.7 ஆம் தேதி முதல் கொடைக்கானல் செல்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் செப்.30 வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள், கடன் விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
பழனி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை முறையாக அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில் திண்டுக்கல் ஆட்சியர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தை செயல்படுத்திடும் பொருட்டு, 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நாளை (ஜூன் 28) நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்துத் துறை முதன்மை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். கூட்டத்தில் தோட்டக்கலை, வேளாண் பண்ணைக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு, விவசாயக் கடன் தொடா்பான கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனு அளிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஆண்டவர் கோவில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஏற்கனவே காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், கொடைக்கானல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மத்திய அரசு குற்றவியல் சட்டமான குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நாளை(ஜூன்.27) முதல் ஜூலை.1 வரை 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஊராட்சி ஒன்றிய அலுவலகம். இன்று(ஜூன் 26) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் வடக்கு போலீசார் மாற்றுத்திறனாளிகளை சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகர் நல அலுவலர் பரிதாவாணி மீது மேயர் இளமதியிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து பரிதாவாணி கூறுகையில்;-புகாரில் உண்மை இல்லை. பொது மக்களுக்கான பணிகளை செய்து கொடுக்க சில அலுவலர்கள் பண வசூலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து அலுவலர்களிடம் விசாரித்தேன். அதனால் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.