Dindigul

News April 18, 2025

களவு பொருளை கை சேர்க்கும் கருப்பர்

image

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கருப்பணசாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் களவு போன பொருள் மீண்டும் கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும், பில்லி சூனியம் அகலும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News April 18, 2025

பழனி வாசவி மஹாலில் நாணய கண்காட்சி

image

பழனி வாசவி மஹால் தெற்குரதவீதி, நாணய கண்காட்சி காலை 9.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை ஏப்ரல் 18, 19, 20 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. பழைய நாணயம், அஞ்சல் தலை மற்றும் பணத்தாள் வரலாற்று சிறப்புமிக்க கல்வி கண்காட்சியில்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். அனுமதி இலவசம்

News April 18, 2025

திண்டுக்கல்லில் தெரிய வேண்டிய மாநகராட்சி எண்கள்

image

▶️ஆணையர், ஒட்டன்சத்திரம் நகராட்சி: 7373735856
▶️ஆணையர், திண்டுக்கல் மாநகராட்சி :9444113267
▶️ஆணையர், பழனி நகராட்சி: 7397396277
▶️ஆணையர், கொடைக்கானல் நகராட்சி: 7397396280

News April 18, 2025

திண்டுக்கல்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற ஆப்பை பயன்படுத்தி பயணிகள் பயன்பெறலாம்.உங்கள் புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும். பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 18, 2025

திண்டுக்கல்லின் மர்ம வெடிச்சத்ததிற்கு விடை!

image

திண்டுக்கல் நகர் மற்றும் வேடசந்தூர் வட்டங்களில் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலி கேட்கப்பட்டது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் துறையின் நிபுணர்கள் குழு ஆய்வுகள் மேற்கொண்டதில், நிலநடுக்கத்துக்கு தொடர்புடையதல்ல என அறிக்கை சமர்ப்பித்தனர். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியார் சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

தாழையூத்து அருவியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம்?

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை & விருப்பாச்சி தாழையூத்து அருவியை சுற்றுலா தளமாக்க ₹8,22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,மேலும் இத்திட்டம் 2023 ல் ஒதுக்கப்பட்ட நிதி ஆனால் இன்னும் சுற்றுலாத்தலமாக இந்த அணைகள் நிறைவேற்றப்படுமா? பாடாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், மேலும் தாழையூத்து அருவி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

News April 17, 2025

தீரன் சின்னமலை பிறந்தநாள் அமைச்சர் பதிவு

image

ஏப்ரல் 17 சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் இன்று, சென்னிமலைக்கும்- சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்ன மலை என்று ஆங்கில ஆதிக்கத்தை குலை நடுங்கச் செய்தவர், எதிரிகளால் இறுதிவரை நேரடியாக போரிட்டு வீழ்த்திட முடியாத தீரன் சின்னமலையின் வீரமும் -தியாகமும் என்றைக்கும் நிலைத்திருக்கும், என அமைச்சர்,சக்கரபாணி, தனது சமூக வலைதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

News April 17, 2025

திண்டுக்கல் மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0451-2460084▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0451-2461500. ▶️திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் 9444113267▶️மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் 9444094266▶️மாவட்ட வருவாய் அலுவர்-0451-2460300 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளர் 0451-2461868 ▶️மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0451-2904081..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 17, 2025

திண்டுக்கல்லில் +2 படித்தால் ரூ.25,000 சம்பளம்!

image

திண்டுக்கல்லில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்ற 18- 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் மாதம் ரூ.25000. இதற்கு முன் அனுபவம் அவசியம் அல்ல! மேலும், தகவலுக்கு <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 17, 2025

2 வயது குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி ஊழியர்!

image

திண்டுக்கல்: தருமத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடிக்கு தர்சிகாஸ்ரீ என்ற 2வயது குழந்தை தினமும் சென்று வந்துள்ளது. இந்நிலையில், நேற்று(ஏப்.15) மாலை வீடு திரும்பிய குழந்தையின் கழுத்தில் சூடு வைத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டதற்கு, சேட்டை செய்ததால் சூடு வைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!