India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மேயர் இளமதி தலைமையில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குழாய் இணைப்பு பெறுதல் , பாதாள சாக்கடை இணைப்பு பெறுதல், சொத்து வரி சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
தூய்மையான மருத்துவமனைக்கு ஆண்டு தோறும் ‘காயகல்ப்’ விருது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பம் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதாரத் திட்டக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2023-24ம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், பழனி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 99.5% மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.
பழனியை அடுத்த பூலாம்பட்டியில் வெடிக்காரன்வலசு அரளிக்குத்து குளத்தில் சிட்கோ அமைப்பதற்கு நேற்று பூலாம்பட்டி பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நுாற்றுக்கணக்கானோரை கைது செய்து தொப்பம்பட்டி தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ-க்கான போட்டித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 3.7.2024 அன்று தொடங்கப்படுகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூன் 30) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 27 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சென்னை ஓய்வூதிய இயக்குநர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. மேலும் ஜூலை 15ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவர்களிடம் விண்ணப்பம் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே மே-7ஆம் தேதி முதல் கொடைக்கானல் செல்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் செப்-30 வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே கொடைக்கானல் செல்வோர் இ பாஸ் பெற்றுக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாள்“ தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜூலை 9 அன்று நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் தொடர்பாக கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 0451- 2461585 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாள்“ தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 9.7.2024 அன்று நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் தொடர்பாக கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 0451- 2461585 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.