India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில், தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய உரிய கல்வி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை-8ஆம் தேதிக்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ
விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
பழனியில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கப்பட உள்ளது. கட்டணம் குழந்தைகளுக்கு ரூ.4,600, பெரியவர்களுக்கு ரூ.5,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை 3 வேளை உணவு மற்றும் சிறப்பு தரிசன கட்டணம் உள்ளிட்டவை இதில் அடங்கும். www.ttdconline.com என்ற
இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தில் பயனடைய விரும்பும் பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் (AGRISNET) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6,200 பேர் குரூப் – 1 தேர்வை எழுதுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(குரூப்-1) முதல் நிலை போட்டி தேர்வு வருகிற 13ஆம் தேதி திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 9 இடங்களிலும் மேற்கு வட்டத்தில் 6 இடங்களிலும் மொத்தம் 22 மையங்களில் 6,200 பேர் எழுதுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டிற்கு கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 % மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய ஆவணங்களுடன் 15.07.2024-க்குள் கால்நடை மருந்தகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 8.7.2024 அன்று முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை கோட்டாட்சியர் தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண் சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று மாலை 5 மணிக்கு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நேரத்தில், ஜுன்-2024ம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜூலை-2024-ம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் இன்று (03.07.2024) திறந்து வைத்தனர். உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ரேணுகா, செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் இருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில்
பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவற்கு
மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, திட்ட விவரங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தினை 15.07.2024ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்: அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, தற்போது 15 கோடி ரூபாயில் பாதுகாப்பு மையத்திற்கான கட்டடப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. சுமார் 8.77 ஹெக்டேரில் அமைய உள்ள இந்த மையத்தில் பார்வையாளர்கள் நடந்து செல்ல நடைபாதை, உயர்கோபுரங்கள், உணவகம், கழிப்பறை,அமையவுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.