India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), திண்டுக்கல்(குள்ளனம்பட்டி) அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை.15 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9499055764, 9499055762 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் .
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று(ஜூலை. 10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில் 2-ம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் 11.07.24 முதல் 23.08.24 வரை 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று கொள்ளவும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பொதுகாப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.520, ரூ.555, ரூ.755 தவணைத் தொகை செலுத்தி ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் அனுசுயா முன்னிலை வகித்தார். நெற்பயிருக்கு ஜூலை 31ஆம்தேதி சோளம் மக்காச்சோளம் நிலக்கடலை செப்டம்பர் 16ஆம் தேதி பருத்தி செப்டம்பர் 30ம்தேதி ஆகிய பயிர்களுக்கு பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 1023 குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 1126 குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1946 குடிசைகள் என மொத்தம் 4095 குடிசைகள் கண்டறியப்பட்டு, அந்த குடிசைகள் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் பூங்கொடி தகவல்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளங்களில் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து ஆக. 31-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது திங்கள் கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெறும். அந்தவகையில், ஜூலை மாதத்திற்கான வேளாண் குறைதீர் கூட்டம் நாளை (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான கோரிக்கையை மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி, நல்லூர்காடுவளவு பள்ளியில் காலியாகயுள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவகத்தில் நேரடியாகவோ தபால் மூலமாகவோ ஜூலை 8க்குள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு “நம்மாழ்வார் விருது” வழங்கப்படுகிறது. இவ்விருது பெற விரும்புவோர் https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவுக்கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.