India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, தொப்பம்பட்டியில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விண்ணப்பித்துள்ள 3 லட்சம் பேரில் தகுதி உள்ளவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 230 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
ஆத்தூர் ஊராட்சி என்.பஞ்சம்பட்டியில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அதில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இதில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழிலை ஊக்குப்படுத்த கிராமங்களில் சிறிய அளவில் 100 நாட்டுக்கோழி பண்ணைகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு சார்பில் ஒரு பண்ணைக்கு ரூ.1,51,485 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை.15 க்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அனுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிக்கான மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு மாணவர்கள் சேர்க்கைகான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும்,ஊக்கத் தொகை மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ம் வகுப்பு வரை கல்வி தகுதி இருத்தல் வேண்டும், வயது வரம்பு 13 முதல் 16 க்குள் இருத்தல் வேண்டும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி (இரவு 7 மணி) வரை திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில்
அங்கக வேளாண்மை குறித்து ஜூலை.22 முதல் 27 வரை 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகள் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 15 ஆம் தேதிக்குள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட 6 வட்டங்களில் உள்ள 54 கிராமங்களில் பளியர் இன மக்கள் 1,320 குடும்பங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 5,401 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 2,475 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம். தையல் பயிற்சி நிறைவு செய்ததற்கான உரிய ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலத்தில் விண்ணப்பம் சமர்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 273 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் வட்டத்தின் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.