Dindigul

News July 17, 2024

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

image

நத்தம் அருகே 7 பவுன் செயின் பறித்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சங்கேஸ்வரன் (22), வழிப்பறியில் ஈடுபட்ட பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், ஆட்சியருக்கு பரித்துரை செய்தார். அதன்பேரில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

News July 17, 2024

திண்டுக்கல்லில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 2,768 பணியிடங்களுக்கு ஜூலை.21 அன்று தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில்<<>> வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். திண்டுக்கல்லை 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

ஒரே மாதத்தில் 2 முறை நிரம்பிய காமராஜர் அணை

image

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் காமராஜர் அணை அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதிகளில் உருவாகும் குடகனாறு, கூழையாறு மூலம் தண்ணீர் அணைக்கு வருகிறது. இதில் 23.5 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. குடிநீருக்காக தினமும் 9 எம்.எல்.டி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 27 ஆம் தேதி நிரம்பிய அணை தற்போது பெய்து வரும் மழையால் 2 ஆவது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 16, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் 71 மி.மீ மழை பதிவு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 71 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதன்படி திண்டுக்கல்லில் 8.8, கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 22.30, பழனியில் 10, சத்திரப்பட்டியில் 7.20, நிலக்கோட்டையில் 3, நத்தத்தில் 3, வேடசந்தூரில் 1, பிரையன்ட் பூங்காவில் 12.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 16, 2024

மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க முகாம்

image

பள்ளி மாணவ, மாணவிகள் அரசின் நலத்திட்டங்களை எளிதாக பெற, திண்டுக்கல் மாவட்டத்தில் “பயிலும் பள்ளியிலேயே வங்கிக் கணக்கு துவங்குதல்” எனும் தலைப்பில் மாணவர்களுக்கு அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திண்டுக்கல் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்குரிய விண்ணப்பபடிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchiturai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் எண்(0451-2461585) வாயிலாக தொடர்புகொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

திண்டுக்கல்லில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு

image

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தக்காளி வரத்து குறைந்து அதன் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ரூ.40 விற்று வந்த ஒரு கிலோ தக்காளி தற்போது விலை உயர்ந்து ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரிசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

News July 16, 2024

திண்டுக்கலில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை(19.7.2024) அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் ராக்ஸ் கே.ஆர் .எஸ் நியூ லைப் மருத்துவமனை இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்துகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சப் கலெக்டர் ஆபிஸ் சாலையில் உள்ள பிச்சாண்டி பில்டிங்கில் இம்முகாம் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!